பரிமாறும் அளவு - 3 நபருக்கு
தேவையான பொருள்கள் -
தேவையான பொருள்கள் -
- வஞ்சீரம் மீன் - 1/4 கிலோ
- மிளகாய் வத்தல் - 6
- கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி
- சீரகம் -1 மேஜைக்கரண்டி
- மிளகு -1 தேக்கரண்டி
- தக்காளி -1 (சிறியது)
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய்த் துருவல் - 6 மேஜைக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 6
- புளி - சிறிய எலுமிச்சை அளவு
- நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- கடுகு -1 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு -1 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 4
- வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- மீனை நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்தி வைத்துகொள்ளவும். வெங்காயம், தக்காளியை சிறிதாக வெட்டி வைத்து கொள்ளவும். புளியை 2 1/2 கப் தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் இல்லாமல் லேசாக வறுத்து கொள்ளவும். அடுப்பை சிம்மில் வைத்து கருகவிடாமல் வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு உடனே கறிவேப்பிலையை சூடாக இருக்கும் கடாயில் போட்டு சில நொடிகள் வதக்கவும்.
- ஆறியவுடன் தக்காளியை சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு நன்கு அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
- பிறகு தேங்காய்த் துருவலையும், வெங்காயத்தையும் சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்து கொள்ளவும்.
- அதே கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பில்லை, சின்ன வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டுத் தாளிக்கவும்.
- தாளித்ததும் அரைத்து வைத்த மசாலாவைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கி கொள்ளவும். பின் புளியை கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் அல்லது மசாலா வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும்.
- மசாலா வாடை போனதும் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து 3 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
- கடைசியாக மீனை சேர்த்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும். சுவையான மீன் குழம்பு ரெடி.
- மீன் குழம்பை பொடி வகைகள் போட்டு செய்வதை விட அரைத்த மசாலா போட்டு செய்தால் நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment