Friday, February 26, 2016

சுரைக்காய் அடை / Bottle Gourd Adai

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. இட்லி அரிசி - 200 கிராம் 
  2. துவரம் பருப்பு - 50 கிராம் 
  3. கடலைப்பருப்பு - 50 கிராம் 
  4. பாசிப்பருப்பு - 50 கிராம் 
  5. சுரைக்காய் - 100 கிராம் 
  6. சின்ன வெங்காயம் - 50 கிராம் 
  7. மிளகாய் வத்தல் - 4
  8. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 
  9. காயத்தூள் - சிறிது 
  10. நல்லெண்ணெய் - தேவையான அளவு
  11. கறிவேப்பிலை - சிறிது 
  12. மல்லித்தழை - சிறிது 
  13. உப்பு - தேவையான அளவு 
செய்முறை -
  1. இட்லி அரிசி, பருப்பு வகைகள் இரண்டையும் நன்றாக கழுவி தனித்தனியே 3 மணி நேரம் ஊற வைக்கவும். 
  2. சுரைக்காய், கறிவேப்பிலை, மல்லித்தழை மூன்றையும் பொடிதாக நறுக்கி  வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  3.  ஊறிய பிறகு அரிசி, மிளகாய் வத்தல் மற்றும் உப்பு சேர்த்து கிரைண்டரில் ரவை பதத்திற்கு அரைக்கவும்.
       
  4. பிறகு அதனுடன் பருப்பு வகைகள், மஞ்சள் தூள், காயத்தூள், சுரைக்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்து பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
  5. பிறகு அதனுடன் மல்லித்தழை, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
  6. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து லேசாக நல்லெண்ணெய் தடவவும். தோசைக்கல் சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி பரப்பவும். சுற்றிலும் நல்லெண்ணெய் ஊற்றவும். 
  7. ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி போடவும். இரு புறமும் வெந்ததும் எடுத்து தட்டில் வைக்கவும். மீதமுள்ள மாவையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். சுவையான அடை ரெடி. தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சேர்த்து பரிமாறலாம். 
     

Thursday, February 18, 2016

பொன்னாங்கண்ணி கீரை பொரியல் / Ponnangkanni Keerai Poriyal

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பொன்னாங் கண்ணி கீரை - ஒரு சிறிய கட்டு 
  2. பாசிப்பருப்பு - 3 மேஜைக்கரண்டி 
  3. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  4. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. சின்ன வெங்காயம் - 10
  5. மிளகாய் வத்தல் - 2
  6. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மூக்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் பாசிப்பருப்பு, காயத்தூள் சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக வைத்துக் கொள்ளவும்.
  2. கீரையை நன்றாக கழுவி காம்புகளை ஆய்ந்து பொடிதாக நறுக்கி வைக்கவும். சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை வெங்காயம், மிளகாய் வத்தல் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள கீரையும், உப்பும் சேர்த்து நன்றாக கிளறவும். கீரையில் தண்ணீர் இருப்பதால் தண்ணீர் சேர்க்க தேவை இல்லை.
  5.  கீரை நன்கு வெந்ததும் அவித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். 
  6. சுவையான பொன்னாங்கண்ணி கீரை பொரியல் ரெடி. சாம்பார் சாதம், புளிக்குழம்பு சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Friday, February 12, 2016

முட்டைகோஸ் பட்டாணி பொரியல் / Cabbage Peas Poriyal


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. முட்டை கோஸ் - 100 கிராம் 
  2. பிரஷ் பட்டாணி - 100 கிராம் 
  3. தக்காளி - 1
  4. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி 
  5. சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. உப்பு - தேவையான அளவு 
  8. மல்லித்தழை - சிறிது 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முட்டைகோஸ், வெங்காயம், தக்காளி மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் பட்டாணியை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கொதிக்க  ஆரம்பித்தவுடன் அடுப்பை  சிம்மில் வைத்து 15 நிமிடம் வைக்கவும்.பட்டாணி வெந்ததும்  தண்ணீரை வடித்து  தனியே வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் முட்டைகோஸ் சேர்த்து கிளறி அதனுடன் 100 மில்லி தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவிடவும்.
  5. முட்டைகோஸ் நன்கு வெந்ததும் அதனுடன் உப்பு, அவித்து வைத்துள்ள பட்டாணி சேர்த்து கிளறவும்.
  6. பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். பிறகு தேங்காய் துருவல், மல்லித்தழை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான முட்டைகோஸ் பட்டாணி பொரியல் ரெடி.

Friday, February 5, 2016

பொன்னாங்கண்ணி கீரை கூட்டு / Ponnangkanni Keerai Kottu


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பொன்னாங்கண்ணி கீரை - 2 கைப்பிடி அளவு 
  2. பாசிப்பருப்பு - 50 கிராம் 
  3. காயம் - 1/2 தேக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  2. தக்காளி - 1
  3. சின்ன வெங்காயம் - 6
  4. மிளகாய் வத்தல் - 2
  5. சீரகம் - 1 தேக்கரண்டி 
  6. பூண்டு பற்கள் - 3
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. கீரையை நன்கு கழுவி காம்புகளை ஆய்ந்து பொடிதாக நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவல், மிளகாய் வத்தல், சீரகம், பூண்டு பற்கள், சின்ன வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாசிப்பருப்பு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும்.
  3. கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து முக்கால் பதம் வரை வேக வைக்கவும். பிறகு அதனுடன் கீரை, உப்பு சேர்க்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
  4. கீரை வெந்த்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும். கூட்டு கெட்டியானதும் இறக்கி விடவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து கீரை கூட்டில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான பொன்னாங்கண்ணி கீரை கூட்டு ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...