Tuesday, July 29, 2014

மைசூர் ரசம் / Mysore Rasam

 பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. துவரம் பருப்பு - 50 கிராம் 
  2. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  3. புளி - சிறிது 
  4. தக்காளி - 1
  5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  6. பூண்டுப்பல் - 5
  7. உப்பு - தேவையான அளவு 
  8. கறிவேப்பிலை - சிறிது 
  9. மல்லி இலை - சிறிது  
  10. எண்ணெய் - 1 தேக்கரண்டி                    
வறுத்து அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 1
  2. கொத்தமல்லி - 1 தேக்கரண்டி 
  3. மிளகு - 1 தேக்கரண்டி 
  4. சீரகம் - 1 தேக்கரண்டி
  5. துவரம்பருப்பு - 1 தேக்கரண்டி
  6. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
தாளிக்க -
  1. நெய் - 1 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
செய்முறை -
  1. முதலில் புளியை 300 மில்லி தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
  2. பருப்பை நன்றாக கழுவி அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து ஒரு  சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு, துவரம்பருப்பு, தேங்காய் துருவல், பூண்டுபல் எல்லாவற்றையும் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து லேசாக வறுத்து அடுப்பை அணைக்கவும்.
  4. சீரகத்தை வறுத்த பொருள்களோடு சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸ்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  5. தக்காளியை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணைய்  ஊற்றி சூடானதும் தக்காளியை போட்டு நன்கு சுருள வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் கரகரப்பாக அரைத்து வைத்துள்ள பொடி, உப்பு மற்றும் புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  7. புளியின் பச்சை வாடை போனதும் அவித்து வைத்துள்ள பருப்பை நன்கு மசித்து சேர்க்கவும். பிறகு மல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விடவும்.
  8. அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து ரசத்தில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான மைசூர் ரசம் ரெடி.

Wednesday, July 23, 2014

முட்டை நூடுல்ஸ் / Egg Noodles

 பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. நூடுல்ஸ் / ஸ்பகட்டி - 150 கிராம்
  2. முட்டை - 2
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 1
  5. குடமிளகாய் - 1
  6. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி 
  7. கரம் மசாலா - 1 தேக்கரண்டி 
  8. சோயா சாஸ் - 1 தேக்கரண்டி 
  9. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  10. உப்பு - தேவைக்கேற்ப
  11. கொத்தமல்லித் தழை - சிறிது  
செய்முறை -
  1. முதலில் ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சிறிது உப்பு, ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் மற்றும் நூடுல்ஸ் சேர்த்து கொதிக்க விடவும்.
  2. நூடுல்ஸ் வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டியில் வடித்து எடுத்து குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைக்கவும்.                                                      
  3. வெங்காயம், தக்காளி, குடமிளகாய் மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து மூன்று மேஜைக்கரண்டி எண்ணைய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி சுருள வதங்கியதும் குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, சோயா சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.                                                                      
  6. வதக்கியவற்றை கடாயில் ஓரமாக ஒதிக்கி வைத்து விட்டு மற்றொரு புறத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.                                                           
  7. முட்டையை நன்றாக கிளறி பொடிமாஸ் மாதிரி செய்து கொள்ளவும். பிறகு அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கிளறவும்.                         
  8. பெரிய கடாய் இல்லையென்றால் மற்றொரு கடாயில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு முட்டையை சேர்த்து தனியாக கிளறி இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  9. இப்பபோது நூடுல்ஸ் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.   கொத்தமல்லித் தழையை சேர்த்து பரிமாறவும். சுவையான முட்டை நூடுல்ஸ் ரெடி. 

சிக்கன் பிரியாணி - 2 / Chicken Biriyani - Pakki Style

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பெரிய வெங்காயம் - 1
  2. சிக்கன் - 250 கிராம்
  3. கொத்தமல்லித்தழை மற்றும் புதினா - 1/2 கப்
  4. மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
  5. சீரகத் தூள் - 1 மேஜைக்கரண்டி
  6. மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
  7. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  9. தயிர் - 2 மேஜைகரண்டி
  10. எலுமிச்சைசை சாறு - 1 மேஜைக்கரண்டி
  11. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  12. பட்டை - 1
  13. கிராம்பு - 2
  14. நெய் - 2 மேஜைக்கரண்டி
  15. உப்பு - தேவையான அளவு
சாதம் வடிக்க -
  1. பாஸ்மதி அரிசி - 2 கப்
  2. உப்பு - தேவையான அளவு
  3. பட்டை - 1
  4. கிராம்பு - 2
  5. ஏலக்காய் - 3
  6. பிரிஞ்சி இலை - 2
  7. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
அரைக்க -
  1. இஞ்சி(துருவியது) - 2 மேஜைக்கரண்டி
  2. பூண்டு(துருவியது) - 2 மேஜைக்கரண்டி
  3. பச்சை மிளகாய் - 2
  4. பட்டை - 1
  5. கிராம்பு - 2
  6. சோம்பு - 1 மேஜைக்கரண்டி
செய்முறை -
  1. அரிசியை கழுவி 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
  2. அரைக்க கொடுத்தவற்றை நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும். சிக்கனை நன்றாக கழுவி வெட்டி கொள்ளவும். கொத்தமல்லித் தழை, புதினாவை சிறியதாக வெட்டி கொள்ளவும்.
  4. ஒரு அடிகனமான பாத்திரத்தில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.
  5. பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியவுடன் அரைத்த கலவையை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  6. அதன் பின் சிக்கன், உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள் போட்டு கிளறி விடவும்.
  7. கொத்தமல்லி தழை, புதினா, தயிர் மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து சிக்கன் வேகும் வரை மூடி போட்டு வேக விடவும்.
  8. சிக்கன் வேகும் போதே மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்ததும் உப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, எண்ணெய் சேர்க்கவும். உப்பு சரி பார்த்து விட்டு அரிசியை போடவும். அரிசி 90% வெந்ததும் அதை வடித்து விடவும்.
  9. பட்டை, கிராம்பை அதிகமாக விரும்பாதோர் சாதத்தை வடித்ததும் அதிலிருக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் அனைத்தையும் எடுத்து விடவும்.
  10. ஓவனை 350 F-ல் சூடு பண்ணவும். ஒரு பெரிய மூடி கொண்ட அகலமான அடிகனமான கடாயை எடுத்து கொள்ளவும். 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டுக் கொள்ளவும். 
  11. பிறகு தயாராக இருக்கும் கிரேவியில் இருந்து சிக்கன் துண்டுகளை மட்டும் எடுத்து பரப்பி வைக்கவும்.
  12. பிறகு வடித்த சாதத்தை சிக்கன் துண்டுகள் மீது பரப்பி வைக்கவும்.
  13. அதன் மேல் மீதமுள்ள கிரேவியை ஊற்றவும். அதன் மேல் 2 மேஜைக்கரண்டி நெய்யை பரப்பி ஊற்றவும்.
  14.  பிறகு அலுமினியம் பாயில் போட்டு மூடியை போடவும். டைட்டாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மூடியை போட்டு சப்பாத்தி மாவை சுற்றி ஒட்டி விட வேண்டும்.
  15. அதை ஓவனில் 25 நிமிடம் வைக்கவும். பிறகு ஓவனில் இருந்து எடுத்து விடவும். ஒரு 15 நிமிடம் கழித்து மூடியை திறந்து மெதுவாக கிளறி பரிமாறவும்.

Thursday, July 17, 2014

பனீர் பட்டர் மசாலா / Paneer Butter Masala - 200 வது பதிவு

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பனீர் துண்டுகள் - 200 கிராம்
  2. பெரிய தக்காளி - 2
  3. பெரிய வெங்காயம் - 1
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி
  5. காஷ்மீரி  மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
  6. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
  7. சீரகத் தூள் - 1 மேஜைக்கரண்டி
  8. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  9. முந்திரிப்பருப்பு - 6 
  10. மல்லித் தழை - சிறிது 
  11. கஸ்தூரி மேத்தி இலை - 1 தேக்கரண்டி 
  12. உப்பு - தேவையான அளவு                      
தாளிக்க -
  1. வெண்ணைய் - 3 மேஜைக்கரண்டி 
  2. எண்ணைய் - 2 மேஜைக்கரண்டி 
  3. பட்டை - 1/2 இன்ச் அளவு 
  4. கிராம்பு - 2
  5. பிரிஞ்சி இலை - சிறிது 
  6. ஏலக்காய் - 2                                            
செய்முறை -
  1. பன்னீரை சதுரமாக வெட்டி வைக்கவும். தக்காளி, வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி வெண்ணைய் போட்டு சூடானவுடன் பனீர் துண்டுகளை போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து லேசாக வதக்கி வைக்கவும்.
  3. அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி முந்திரி பருப்பு, வெங்காயம் மற்றும் தக்காளியை தனி தனியாக போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  4. ஆறியதும் தனி தனியாக மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து வெண்ணைய், எண்ணைய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய் போடவும்.
  6. பிறகு  இஞ்சி பூண்டை பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  7. பிறகு வெங்காய விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.                                     
  8. தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  9. மசாலா வாடை அடங்கியதும் முந்திரி பருப்பு கலவை, கரம் மசாலா, கஸ்தூரி மேதி இலை சேர்த்துக் கிளறவும்.
  10. பிறகு பனீர் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.
  11. இறுதியில் மல்லி இலை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான பனீர் பட்டர் மசாலா ரெடி. பனீர் பட்டர் மசாலா சப்பாத்தி, பரோட்டா, நான் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.                                                                              

Wednesday, July 2, 2014

பிரட் உப்புமா / Bread Upma

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பிரட் துண்டுகள் - 6
  2. தக்காளி - 1
  3. லெமன் ஜூஸ் - 2 மேஜைக்கரண்டி 
  4. தண்ணீர் - 100 மில்லி 
  5. மல்லித்தழை - சிறிது 
  6. உப்பு - தேவையான அளவு                      
தாளிக்க -
  1. எண்ணைய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1
  5. பச்சை மிளகாய் - 2
  6. இஞ்சி - 1/2 இன்ச் அளவு 
  7. கறிவேப்பிலை - சிறிது                            
செய்முறை -
  1. முதலில் பிரட் துண்டுகளின் ஓரங்களை கட் பண்ணி எடுத்து விடவும். பிறகு பிரட்டை சிறிய துண்டுகளாக கட் பண்ணி  வைக்கவும். தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.                                                                                 
  3. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி நன்கு சுருள வதங்கியதும் அரை கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பு மற்றும் பிரட் துண்டுகளை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறவும்.
  5. இறுதியில் லெமன் ஜூஸ் ஊற்றி மல்லித்தழையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான பிரட் உப்புமா ரெடி.                                            
Related Posts Plugin for WordPress, Blogger...