பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
தேவையான பொருள்கள் -
- பனீர் துண்டுகள் - 200 கிராம்
- பெரிய தக்காளி - 2
- பெரிய வெங்காயம் - 1
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி
- காஷ்மீரி மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
- மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
- சீரகத் தூள் - 1 மேஜைக்கரண்டி
- கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
- முந்திரிப்பருப்பு - 6
- மல்லித் தழை - சிறிது
- கஸ்தூரி மேத்தி இலை - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- பன்னீரை சதுரமாக வெட்டி வைக்கவும். தக்காளி, வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி வெண்ணைய் போட்டு சூடானவுடன் பனீர் துண்டுகளை போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து லேசாக வதக்கி வைக்கவும்.
- அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி முந்திரி பருப்பு, வெங்காயம் மற்றும் தக்காளியை தனி தனியாக போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- ஆறியதும் தனி தனியாக மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து வெண்ணைய், எண்ணைய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய் போடவும்.
- பிறகு இஞ்சி பூண்டை பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- பிறகு வெங்காய விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- மசாலா வாடை அடங்கியதும் முந்திரி பருப்பு கலவை, கரம் மசாலா, கஸ்தூரி மேதி இலை சேர்த்துக் கிளறவும்.
- பிறகு பனீர் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.
- இறுதியில் மல்லி இலை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான பனீர் பட்டர் மசாலா ரெடி. பனீர் பட்டர் மசாலா சப்பாத்தி, பரோட்டா, நான் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
My Favourite panner recipe...............lovely presentation.
ReplyDeleteShobha
www.shobhapink.blogspot.in
Thank you.
DeleteLooks yummy. All time favourite for whole family.
ReplyDeleteThank you.
ReplyDeleteThanks mam
ReplyDeleteThank you Srinivas.
ReplyDelete