Monday, December 26, 2016

இனிப்பு மாங்காய் ஊறுகாய் / Sweet Mango Pickle


தேவையான பொருள்கள் -
  1. மாங்காய் - 1
  2. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  3. காயத்தூள் - 1/4 மேஜைக்கரண்டி 
  4. வெந்தய தூள் - 1/2 மேஜைக்கரண்டி 
  5. அச்சு வெல்லம் - 1
  6. உப்பு - 1/2 மேஜைக்கரண்டி 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
செய்முறை -
  1. மாங்காயை நன்றாக கழுவி துடைத்து விட்டு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அச்சு வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.அச்சுவெல்லம் கரைந்ததும் வடி கட்டி தனியே வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும்.
  4. கடுகு வெடித்தவுடன் மாங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். மாங்காய் வெந்ததும் மிளகாய் தூள், காயத்தூள், வெந்தயத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
  5. இறுதியில் வடி கட்டி வைத்துள்ள அச்சு வெல்லத்தண்ணீரை ஊற்றி நன்றாக கிளறவும். அச்சுவெல்லத் தண்ணீர் கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.
  6. நன்கு ஆறியவுடன் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். ஊறுகாயை பிரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கவும்.

Tuesday, December 20, 2016

பனீர் குருமா / Paneer kuruma


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பனீர் - 200 கிராம் 
  2. தக்காளி - 1
  3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  4. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  5. மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  6. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி 
  9. உப்பு - தேவையான அளவு 
  10. மல்லித் தழை - சிறிது 
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  2. முந்திரிப்பருப்பு - 5
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - சிறிய துண்டு 
  3. கிராம்பு - 2
  4. பெரிய வெங்காயம் - 1
செய்முறை - 
  1.  பனீர், வெங்காயம், தக்காளி, மல்லித்தழை எல்லாவற்றையும் வெட்டி வைக்கவும். பனீர் துண்டுகளை 10 நிமிடம் வெந்நீரில் போட்டு வைக்கவும். 10 நிமிடங்களில் பனீர் மிருதுவாகி விடும்.
  2. தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும், பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள். மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.
  6. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கொதிக்க விடவும். 
  7. பிறகு பனீர் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் வரை கொதிக்க விட்டு மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.  சுவையான பனீர் குருமா ரெடி.

Thursday, December 8, 2016

ஜீரா புலாவ் / Jeera Pulo


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாஸ்மதி அரிசி - 1 கப்
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி 
  3. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நெய் - 2 மேஜைக்கரண்டி 
  2. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  3. சீரகம் - 2 மேஜைக்கரண்டி 
  4. பிரிஞ்சி இலை - 1
  5. பட்டை - சிறிய துண்டு 
  6. கிராம்பு - 2
  7. பெரிய வெங்காயம் - 1
செய்முறை -
  1. வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும்.
  2.  பாஸ்மதி அரிசியை  அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  3.  
  4. அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போடவும். பட்டை பொன்னிறமானதும் சீரகம் போடவும்.
  5. சீரகம் பொரிந்தவுடன் வெங்காயம்  சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  6. பச்சை வாடை போனதும் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீரும் உப்பும் சேர்த்து நன்றாக கலக்கி  மூடி போட்டு மூடவும். 
  7. நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான ஜீரா புலாவ் ரெடி. 
  8. குருமா வகைகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...