Thursday, December 8, 2016

ஜீரா புலாவ் / Jeera Pulo


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாஸ்மதி அரிசி - 1 கப்
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி 
  3. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நெய் - 2 மேஜைக்கரண்டி 
  2. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  3. சீரகம் - 2 மேஜைக்கரண்டி 
  4. பிரிஞ்சி இலை - 1
  5. பட்டை - சிறிய துண்டு 
  6. கிராம்பு - 2
  7. பெரிய வெங்காயம் - 1
செய்முறை -
  1. வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும்.
  2.  பாஸ்மதி அரிசியை  அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  3.  
  4. அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போடவும். பட்டை பொன்னிறமானதும் சீரகம் போடவும்.
  5. சீரகம் பொரிந்தவுடன் வெங்காயம்  சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  6. பச்சை வாடை போனதும் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீரும் உப்பும் சேர்த்து நன்றாக கலக்கி  மூடி போட்டு மூடவும். 
  7. நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான ஜீரா புலாவ் ரெடி. 
  8. குருமா வகைகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

6 comments:

  1. இங்கே - அடிக்கடி நான் இந்த பக்குவத்தில் தேங்காய்ப் பாலுடன் செய்கின்றேன்..

    பெயர் வைத்தது அழகு..

    ReplyDelete
    Replies
    1. துரை செல்வராஜ் ஸார்.. தேங்காய்ப்பாலுடன் செய்வேன் என்றால் தேங்காய்ப்பால் தொட்டுக் கொள்ளவா அல்லது அதில் பாஸ்மதி அரிசியை வேகவைக்கவா?

      Delete
  2. குறித்துக் கொண்டேன்.

    ReplyDelete
  3. Basmati rice cooks fast, so just a whistle in medium flame is enough. water ratio can be reduced to 1.5 cups, instead of 2 cups. 😊😊
    My humble observations about cooking basmati. ☺
    Nice pulao!!

    ReplyDelete
  4. அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. படங்களுடன் விளக்கமாய்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...