பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- பனீர் - 200 கிராம்
- தக்காளி - 1
- இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
- சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- மல்லித் தழை - சிறிது
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- பட்டை - சிறிய துண்டு
- கிராம்பு - 2
- பெரிய வெங்காயம் - 1
- பனீர், வெங்காயம், தக்காளி, மல்லித்தழை எல்லாவற்றையும் வெட்டி வைக்கவும். பனீர் துண்டுகளை 10 நிமிடம் வெந்நீரில் போட்டு வைக்கவும். 10 நிமிடங்களில் பனீர் மிருதுவாகி விடும்.
- தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும், பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள். மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.
- மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.
- பிறகு பனீர் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் வரை கொதிக்க விட்டு மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான பனீர் குருமா ரெடி.
செய்து, சுவைக்க ஆவல் வருகிறது.
ReplyDeleteபன்னீர் பதிலாக வேறு எதையும் உபயோகிக்கலாமா...?
ReplyDeleteஇங்கே எனது சமையலில் தக்காளி சேர்ப்பதில்லை..
ReplyDeleteஉருளைக்கிழங்கு தான்.. அத்துடன் பனீர் - கரம் மசாலா..
ஆஹா.. அட்டகாசம்!..
மிகவும் அருமையான குறிப்பு!
ReplyDelete
ReplyDeleteஅருமையான பதிவு
http://www.ypvnpubs.com/