Thursday, July 25, 2013

பலாப்பழ அல்வா

    
தேவையான பொருள்கள் -
  1. பலாப்பழ சுளைகள் - 20
  2. சர்க்கரை - 200 கிராம்
  3. முந்திரிப் பருப்பு - 10
  4. காய்ந்த திராட்சை -10
  5. ஏலக்காய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
  6. நெய் - 4 மேஜைக்கரண்டி
  7. கேசரி கலர் - சிறிது

செய்முறை -
  1. பலாப்பழச் சுளைகளை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி மற்றும் திராட்சையை போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  3. அதே கடாயில் மீதமுள்ள நெய் சேர்த்து சூடானதும் பலாப்பல சுளைகளை போட்டு மிதமான சூட்டில் வைத்து 5 நிமிடம் கிளறி இறக்கவும்.                                                    
  4. அது நன்றாக ஆறியதும் மிக்ஸ்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கூழாக அரைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் அதே கடாயை வைத்து அரைத்து வைத்துள்ள பலாப்பல சுளை, சர்க்கரை, கேசரி கலர் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறவும்.                                   
  6. சர்க்கரை நன்கு கரைந்தவுடன் ஏலக்காய் பவுடர், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான பலாப்பழ அல்வா ரெடி. சூடு ஆறியதும் பரிமாறவும்.

Tuesday, July 9, 2013

அவல் பணியாரம்



தேவையான பொருள்கள் -
  1. பச்சரிசி - 1 கப்
  2. அவல் - 1 கப்
  3. வெல்லம் (பொடித்தது) - 1 கப்
  4. சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி
  5. நெய் - 50 கிராம்
  6. எண்ணெய் - 50 கிராம்
செய்முறை -
  1. பச்சரிசி மற்றும் அவலை நன்றாக கழுவி 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பின் தண்ணீரை வடித்து விட்டு பச்சரிசி மற்றும் அவலை மிக்சியில் சேர்த்து அரைக்கவும்.
  3. பாதி அரைத்ததும் வெல்லம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.                                
                                                                                                                                                       
                                                                                              
  4. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சோடா உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும். இனிப்பு இன்னும் தேவையென்றால் 2 மேஜைக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
  5. நெய் மற்றும் எண்ணெய் இரண்டையும் சேர்த்து கலந்து வைக்கவும்.
  6. அடுப்பில் பணியார கடாயை வைத்து கலந்து வைத்திருக்கும் நெய் மற்றும் எண்ணெயை ஒரு மேஜைக்கரண்டி எடுத்து ஒவ்வொரு குழிக்கும் ஊற்றவும்.
  7. நன்றாக சூடானதும் மாவை எடுத்து அனைத்து குழிகளிலும் ஊற்றி      மிதமான சூட்டில் வைத்து வேகவிடவும். சிறிது நேரம் கழித்து ஒரு சிறிய கம்பி அல்லது ஸ்பூனால் மாற்றி போடவும்.
  8. இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுத்து விடவும். மீதமுள்ள   மாவையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். சுவையான அவல் பணியாரம் ரெடி.                                                                                                 

Monday, July 1, 2013

இனிப்பு குழிப்பணியாரம்


பரிமாறும்அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பச்சரிசி - 200 கிராம்
  2. இட்லி அரிசி - 200 கிராம்
  3. வெள்ளை முழு உளுந்து - 50 கிராம்
  4. தேங்காய் துருவல் - 200 கிராம்
  5. வெல்லம் (துருவியது)  - 200 கிராம் 
  6. நெய் - 50 கிராம்
  7. எண்ணெய் - 50 கிராம்
  8. உப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை -
  1. பச்சரிசி மற்றும் இட்லி அரிசியை சேர்த்து தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  2. ஊறிய பின் நன்றாக கழுவி கொஞ்சமாக தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதை 6 மணி நேரம் புளிக்க விடவும்.                       
  3. அடுப்பில் கடாயை வைத்து வெல்லம் மற்றும் 50 மில்லி தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். அதை அரிப்பை வைத்து அரித்துக் கொள்ளவும்.
  4. அரைத்து வைத்திருக்கும் மாவில் பாகை ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  5. நெய் மற்றும் எண்ணெய் இரண்டையும் சேர்த்து கலந்து வைக்கவும்.
  6. அடுப்பில் பணியார கடாயை வைத்து கலந்து வைத்திருக்கும் நெய் மற்றும் எண்ணெயை ஒரு மேஜைக்கரண்டி எடுத்து ஒவ்வொரு குழிக்கும் ஊற்றவும்.
  7. நன்றாக சூடானதும் மாவை எடுத்து அனைத்து குழிகளிலும் ஊற்றி      மிதமான சூட்டில் வைத்து வேகவிடவும். சிறிது நேரம் கழித்து ஒரு சிறிய கம்பி அல்லது ஸ்பூனால் மாற்றி போடவும்.          
  8.  இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுத்து விடவும். மீதமுள்ள   மாவையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். சுவையான இனிப்பு பணியாரம் ரெடி.
குறிப்புகள் -
  1. நான்ஸ்டிக் கடாயாக இருந்தால் திருப்பிப் போடும் போது மாவு ஒட்டாமல் நன்றாக வரும்.
  2. மாவை பணியார சட்டியில் ஊற்றுவதற்கு முன்னால் ஒரு முறை ருசி
    பார்த்துக் கொள்ளவும். இனிப்பு தேவைப்பட்டால் சர்க்கரை  சேர்த்துக்  கொள்ளலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...