Friday, March 18, 2016

முளை கட்டிய பாசிப்பயறு குழம்பு / Sprouted Green Moong Dal Gravy


தேவையான பொருள்கள்
  1. முளை கட்டிய பாசிப்பயறு - 100 கிராம் 
  2. சாம்பார் பொடி - 2 மேஜைக்கரண்டி 
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. மல்லித்தழை - சிறிது 
  5. உப்பு - தேவையான அளவு 
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  2. தக்காளி - 1
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. சின்ன வெங்காயம் - 6
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் பாசிப்பயறு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 10 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பிறகு தண்ணீரை வடித்து ஹாட்பாக்ஸில் போட்டு நன்கு மூடி மீண்டும் 10 மணி நேரம் வைக்கவும்.
  3. 10 மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் பயறு நன்கு முளை விட்டிருக்கும்.
  4. அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முளைகட்டிய பயறை போட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக விடவும். 3 நிமிடங்களில் வெந்து விடும்.
  5. பிறகு தண்ணீரை வடித்து தனியே வைக்கவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
  6. தேங்காய் துருவல், தக்காளி இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  7. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். 
  8. வெங்காயம் பொன்னிறமானதும் அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றுடன் பயறு வேக வைத்த  தண்ணீரும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.
  9. மசாலா வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் தக்காளி கலவையை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். பிறகு அவித்து வைத்துள்ள பயறை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  10. இறுதியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான முளை கட்டிய பாசிப்பயறு குழம்பு ரெடி. சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Friday, March 11, 2016

தயிர் ரசம் / Curd Rasam


தயிரை வைத்து சற்று வித்தியாசமாக தயிர் ரசம் எப்படி செய்வதென்று பார்ப்போம் ! எளிதான ரெசிபி இது !
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கெட்டித் தயிர் - 1 கப் 
  2. தண்ணீர் - 1/2 கப் 
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு 
  5. கறிவேப்பிலை - சிறிது 
  6. மல்லித்தழை - சிறிது 
வறுத்து அரைக்க -
  1. துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி 
  2. கொத்தமல்லி - 1 தேக்கரண்டி 
  3. மிளகு - 1 தேக்கரண்டி 
  4. சீரகம் - 1 தேக்கரண்டி 
தாளிக்க -
  1. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி 
  2. மிளகாய் வத்தல் - 1
  3. கடுகு - 1 தேக்கரண்டி 
  4. காயத்தூள் - 1/2 தேக்கரண்டி 
செய்முறை -
  1. துவரம் பருப்பு, கொத்தமல்லி, மிளகு, சீரகம் எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
  2. தயிர், தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, பொடித்து வைத்துள்ள பொடி எல்லாவற்றையும் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கடுகு, காயத்தூள் போடவும். 
  4. கடுகு வெடித்தவுடன் தயிர் கலவையை ஊற்றி கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்க்கவும்.
  5. நுரை கூடி வரும் போது அடுப்பை அணைக்கவும். சுவையான தயிர் ரசம் ரெடி.

Sunday, March 6, 2016

தேங்காய் பர்பி / Thengai Burfi / Coconut Burfi

நான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுடைய பதிவுகளை பார்த்து கருத்து சொன்ன நட்புள்ளங்களுக்கும், சில பதிவுகளை செய்து பார்த்து கருத்து சொன்ன நட்புள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நல்ல நாளில் ஈஸியான தேங்காய் பர்பி ஸ்வீட் பதிவு !!


தேவையான பொருட்கள் -
  1. துருவிய தேங்காய் - 1 கப் 
  2. சர்க்கரை - 3/4 கப் 
  3. பால் அல்லது தண்ணீர் - 1/4 கப் 
  4. ஏலக்காய் தூள் - சிறிது 
  5. நெய் - 1 அல்லது 2 மேஜைக்கரண்டி 
செய்முறை -
  1. தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். டிரேயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி எல்லா இடங்களிலும் படும்படி தடவி வைக்கவும்.
  2. அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் கடாயை வைத்து தேங்காய் துருவல், சர்க்கரை, பால் அல்லது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  3. அடுப்பை சிம்மில் வைத்து கிளற ஆரம்பிக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக வற்ற ஆரம்பிக்கும். அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். பிடித்தால் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும்.
  4. இப்பொது ஏலக்காயை சேர்த்துக் கொள்ளவும். நன்றாக வற்றி சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  5. நெய் தடவிய டிரேயில் பரப்பி விடவும். நன்றாக ஒரு தோசை கரண்டியை வைத்து அழுத்தி பரப்பி கொள்ளுங்கள்.
  6. சிறிது நேரம் கழித்து பர்பி லேசான சூட்டில் இருக்கும் போது ஒரு கத்தியை வைத்து துண்டுகளாக கட் செய்து கொள்ளுங்கள். சுவையான தேங்காய் பர்பி ரெடி.               
குறிப்பு -
  1. முந்திரிப்பருப்பு சேர்க்க விரும்பினால், ஒரு தேக்கரண்டி நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து பர்பியில் ஏலக்காய் தூள் சேர்க்கும் போது அதையும் சேர்த்துக் கொள்ளவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...