தயிரை வைத்து சற்று வித்தியாசமாக தயிர் ரசம் எப்படி செய்வதென்று பார்ப்போம் ! எளிதான ரெசிபி இது !
தேவையான பொருள்கள் -
- கெட்டித் தயிர் - 1 கப்
- தண்ணீர் - 1/2 கப்
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - சிறிது
- மல்லித்தழை - சிறிது
- துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி - 1 தேக்கரண்டி
- மிளகு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
- மிளகாய் வத்தல் - 1
- கடுகு - 1 தேக்கரண்டி
- காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
- துவரம் பருப்பு, கொத்தமல்லி, மிளகு, சீரகம் எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
- தயிர், தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, பொடித்து வைத்துள்ள பொடி எல்லாவற்றையும் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கடுகு, காயத்தூள் போடவும்.
- கடுகு வெடித்தவுடன் தயிர் கலவையை ஊற்றி கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்க்கவும்.
- நுரை கூடி வரும் போது அடுப்பை அணைக்கவும். சுவையான தயிர் ரசம் ரெடி.
அம்மா இந்த பதிவு படிக்கும்போதே
ReplyDeleteருசி அள்ளுது....
சமைத்து ருசித்தால் மிகவும்
அருமையாக இருக்கும்.....
வீட்டில் சமைத்து பார்க்கிறேன் அம்மா....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அஜய்.
Deleteவாவ்.. புது ரெசிப்பி ட்ரை பண்றேன்மா..
ReplyDeleteட்ரை பண்ணு அபி நன்றாக இருக்கும்.
Deleteஆஹா... இதைச் செய்து பார்க்கணுமே...
ReplyDeleteபுதுமையா இருக்கு அம்மா...
செய்து பாருங்கள் குமார்.
Deleteஅய்,, நல்லா இருக்குமா,, பின்னூட்டம் ஏன் லேட் தெரியுமா? சொல்லுங்கள்,, செய்து முடித்துவிட்டேன்,, கொஞ்சம் மோர் குழம்பு டேஸ்ட்,,, ம்ம்,, நன்றிமா
ReplyDeleteசெய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்தற்கு நன்றி மகேஸ்வரி.
ReplyDeleteதயிர் ரசம்!..
ReplyDeleteபுதியதாக இருக்கின்றது.. செய்து பார்க்கின்றேன்..
தயிர் ரசம் புதிது தான் சுவை நன்றாக இருக்கும். செய்து பாருங்கள் சார்.
Deleteவணக்கம்
ReplyDeleteபுதிதாக இருக்கிறது செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
செய்து பாருங்கள் ரூபன் சுவை நன்றாக இருக்கும்.
Deleteஆஹா புதுமையாக இருக்கின்றதே....
ReplyDeleteசரி இந்த பதிவு ஏன் எனது டேஷ்போர்டுக்கு வரவில்லை
தெரியலியே சகோ நீங்க உடனே கருத்து சொல்லி விடுவீங்களே இன்று வரை காணோமே என்று உங்களுக்கு தெரியப்படுத்தினேன். வருகைக்கு நன்றி சகோ.
ReplyDeleteவித்தியாசமான தயிர் ரசம். ரசித்தேன்.
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி சார்.
Deleteவித்தியாசமான ரசம். கேள்விப்படவில்லை இதுவரை. செய்துபார்க்கிறேன்.நன்றி.
ReplyDeleteவித்தியாசமான ரசம் தான் பிரியசகி. சுவை நன்றாக இருக்கும்.
Deleteஆஹா...தயிர் ரசம் செய்து பார்க்கிறேன் சகோ
ReplyDeleteசெய்து பாருங்கள் சகோ.
ReplyDeleteதயிர் ரசம் அருமை சாரதாம்மா..செய்து பார்த்துட்டு சொல்றேன்.
ReplyDeleteநான் இரண்டு மாதம் இந்தியாவில் இருப்பேன்.
ஆஹா இந்தியாவில் இரண்டு மாதங்கள் இருப்பீங்களா ! நல்லா என்ஜாய் பண்ணுங்க ஷமீ.
ReplyDelete