தேவையான பொருள்கள்
- முளை கட்டிய பாசிப்பயறு - 100 கிராம்
- சாம்பார் பொடி - 2 மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- மல்லித்தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
- தக்காளி - 1
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 6
- கறிவேப்பிலை - சிறிது
- முதலில் பாசிப்பயறு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 10 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறிய பிறகு தண்ணீரை வடித்து ஹாட்பாக்ஸில் போட்டு நன்கு மூடி மீண்டும் 10 மணி நேரம் வைக்கவும்.
- 10 மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் பயறு நன்கு முளை விட்டிருக்கும்.
- அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முளைகட்டிய பயறை போட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக விடவும். 3 நிமிடங்களில் வெந்து விடும்.
- பிறகு தண்ணீரை வடித்து தனியே வைக்கவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
- தேங்காய் துருவல், தக்காளி இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றுடன் பயறு வேக வைத்த தண்ணீரும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.
- மசாலா வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் தக்காளி கலவையை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். பிறகு அவித்து வைத்துள்ள பயறை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- இறுதியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான முளை கட்டிய பாசிப்பயறு குழம்பு ரெடி. சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
அருமையாக செய்முறை விளக்கம்
ReplyDeleteதந்துட்டீங்க அம்மா....
சமைக்க முயன்று பார்க்கிறேன் அம்மா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அஜய்.
Deleteஅருமை அம்மா...
ReplyDeleteவருகைக்கு நன்றி.
ReplyDeleteநல்ல படங்களுடன் பகிர்வு நன்று சகோ
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ.
Deleteநல்லா இருக்கும்மா...வெறும் வறுத்த பயிறுகுழம்பு தான் வைத்திருக்கிறேன் அம்மா.. முளைக் கட்டி வைத்து பார்க்கிறேன்..
ReplyDeleteகண்டிப்பாக செய்து பாரு அபி.
Deleteஅருமையான பகிர்வு
ReplyDeleteநன்றி சார்.
Deleteமுளை கட்டிய பயறு உடலுக்கு மிகவும் நல்லது..
ReplyDeleteசமையல் குறிப்பு அருமை..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
Deleteபடங்களுடன் அருமையான செய்முறை விளக்கம்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி அம்மா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்.
ReplyDeleteமுளைகட்டிய குழம்பு அருமை.
ReplyDeleteசெஞ்சு பார்க்குறேன் சாரதாம்மா.
செய்து பாருங்கள் ஷமீ. நன்றாக இருக்கும்.
ReplyDeleteHealthy & yummy gravy.
ReplyDeleteThank you Gayathri.
ReplyDeleteAmma tried this recipe taste s different but gud to eat.thank u
ReplyDeleteThanks for trying.
Delete