தேவையான பொருள்கள் -
- புடலங்காய் தோல் - 1 கப் ( 1/4 கிலோ புடலங்காயில் சீவிய தோல் )
- மிளகாய் வத்தல் - 4
- புளி - சிறு கோலி அளவு
- பூண்டு பற்கள் - 3
- தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
- சீனி - 1 தேக்கரண்டி
- நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- அடுப்பில் கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தல், பூண்டு, புளி சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.
- அதே கடாயில் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து புடலங்காய் தோலை போட்டு வதக்கவும்.
- தோல் நன்கு வதங்கியதும் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி வறுத்து வைத்துள்ள பொருள்களோடு சேர்த்து சிறிது நேரம் ஆற விடவும்.
- ஆறியவுடன் அதனுடன் உப்பு, சீனி சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும். சுவையான புடலங்காய் தோல் துவையல் ரெடி. சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
புடலங்காய் தோலில் துவையலா ? புதுமையாக இருக்கின்றதே.... இந்த முறை ஊருக்கு வரும் போது அம்மாவிடம் சொல்லி செய்து சாப்பிட வேண்டும்
ReplyDeleteஉடன் வருகைக்கு நன்றி சகோ.
Deleteபல நாள்களுக்குப் பின் வந்தேன். சுவைத்தேன். நன்றி.
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்.
Deleteஅருமையான செய்முறை விளக்கம்
ReplyDeleteவித்தியாசமான துவையல்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அஜய்.
Deleteநானும் செய்து பார்க்கிறேன் சகோ. அருமை.
ReplyDeleteசெய்து பாருங்கள் சகோ.
Deleteகேள்விப்படாததொன்று. வித்தியாசமான,அருமையான பகிர்வு.
ReplyDeleteநன்றி பிரியசகி.
Deleteபுடலங்காயில் இப்படியும் ஒரு அம்சம் இருக்கின்றதா!..
ReplyDeleteசுவை தான்..
வாழ்க நலம்..
புடலங்காய் தோல் துவையல் நன்றாக இருக்கு மா.
ReplyDeleteபுடலங்காய் சமைக்கும் பொழுது அடுத்த முறை துவையல் செய்திட வேண்டியது தான்.
புடலங்காயில் துவையலா? பீர்க்கங்காய் துவையல் தெரியும்,,, சூப்பர்மா செய்து பார்க்கிறோம்,,,
ReplyDeleteநன்றி