Wednesday, December 31, 2014

சிக்கன் ப்ரை / Chicken Fry

பரிமாறும்  அளவு  - 2 நபருக்கு

தேவையான  பொருள்கள் -
  1. சிக்கன் - 1/4 கிலோ 
  2. இஞ்சி  பூண்டு  விழுது  - 1 தேக்கரண்டி 
  3. தயிர்  -  50 கிராம் 
  4. லெமன் ஜூஸ்  -  2 மேஜைக்கரண்டி 
  5. சிக்கன் 65 பவுடர் - 1  மேஜைக்கரண்டி 
  6. மல்லித்  தழை - சிறிது 
  7. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  8. உப்பு  - தேவையான  அளவு 
செய்முறை -
  1. முதலில் சிக்கனை நன்கு கழுவி வைக்கவும். கழுவிய சிக்கன் மீது இஞ்சி  பூண்டு விழுது , தயிர், லெமன் ஜூஸ், சிக்கன் 65 பவுடர், உப்பு  எல்லாவற்றையும் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
                                                                       
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போடவும்.
  3. அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சிக்கன் வேகும் வரை கிளறி  விடவும். சிக்கன் வேகும் போது தண்ணிர் விடும்.                                                   
  4. சிக்கன் வெந்து தண்ணிர் நன்றாக வற்றிய பிறகு அடுப்பை  சிறிது கூட்டி கொள்ளவும்.             
  5. இரு புறமும் நன்றாக சிவக்கும் வரை கிளறி அடுப்பை அணைக்கவும்.  
  6. மல்லித் தழையை தூவி பரிமாறவும். சுவையான சிக்கன் ப்ரை ரெடி. 

Friday, December 12, 2014

கேரட் கூட்டு / Carrot Kootu

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கேரட் - 2
  2. துவரம்  பருப்பு - 50 கிராம் 
  3. சாம்பார்  பொடி - 2 மேஜைக்கரண்டி 
  4. காயத் தூள் - 1/4 தேக்கரண்டி 
  5. மஞ்சள்  தூள் - 1/2 தேக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு 

அரைக்க -
  1. தேங்காய்  துருவல் - 1/4 கப் 
  2. தக்காளி - 1 
  3. சின்ன வெங்காயம் - 5
                                                                                     
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் கேரட்டை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். துவரம் பருப்புடன் காயம் சேர்த்து  குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.  தேங்காய் துருவல், தக்காளி, வெங்காயம் மூன்றையும் மிக்ஸ்சியில்  அரைத்துக்  கொள்ளவும்.                                                     

  2. அடுப்பில் கடாயை வைத்து கேரட் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி  வேக விடவும். கேரட் வெந்ததும் அதனுடன் உப்பு,மற்றும் சாம்பார் பொடி  சேர்த்து கொதிக்க விடவும்.                                                                                                                         

  3. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய கலவை, மற்றும் அவித்து வைத்துள்ள பருப்பு இரண்டையும் சேர்த்து  5 நிமிடம்  கொதிக்க விடவும்.                                     
  4.  தண்ணீர் தேவைப் பட்டால் சிறிது சேர்த்துக்கொள்ளவும். கூட்டு கெட்டியானதும் உப்பு சரி பார்த்து பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.        
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம்  பொன்னிறமானதும் எடுத்து கூட்டில் சேர்த்து கலக்கி விடவும். சுவையான கேரட் கூட்டு  ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...