![]() |
பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- புடலைங்காய் - 400 கிராம்
- கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி
- சோள மாவு - 2 மேஜைக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - சிறிது
- புடைலங்காயின் தோலை சீவி அதன் உள்ளே இருக்கும் வெள்ளையான பகுதியை எடுத்து விட்டு நீளவாக்கில் வெட்டி வைக்கவும். பிறகு அதன் மேல் கடலை மாவு, சோளமாவு, மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும் படி நன்றாக கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வெட்டி வைத்துள்ள புடலைங்காய் துண்டுகளை கடாய் கொள்ளும் அளவுக்கு போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
- மீதமுள்ள எல்லா புடலைங்காய் துண்டுகளையும் இதே முறையில் பொரித்து எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும். எண்ணெய் உறிஞ்சியவுடன் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
- கடாயில் உள்ள அதே எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு பொரித்து வறுத்து வைத்துள்ள புடலைங்காயின் மேல் தூவி விடவும். சுவையான புடலைங்காய் வறுவல் ரெடி.
ஹைய்யா ...! நான் தான் பர்ஸ்டு.. ! வாவ் ...!கேள்விப்படாத ரெசிப்பி சூப்பர்.. தேங்க்ஸ் அம்மா
ReplyDeleteஉடன் வருகை தந்து சொன்ன கருத்துக்கு நன்றி அபிநயா.
ReplyDeleteநாந்தான் லேட்டா.... சூடு ஆறிவிட்டாலும் சுவை நன்று.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
Deletem..m யம்மி
ReplyDeleteபார்க்கவும் நன்றாக சுவையாகவும் உள்ளது.
நன்றி சகோ.
Deleteவணக்கம்
ReplyDeleteசுவையான உணவு.. செய்முறை விளக்கத்துடன் அசத்தல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரூபன்.
Deleteசூப்பர்!
ReplyDeleteநன்றி சார்.
Deleteவித்தியாசமான ரெசிப்பியாய் இருக்கு அக்கா. நான் சின்னஞ்சிறுசா வெட்டி பொரியல்தான் செய்வேன் . சூப்பர். .!!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரியசகி.
Deleteபுடலங்காய் வறுவல் ருசித்தது இல்லை! புதுமையாகத்தான் இருக்கிறது! நன்றி!
ReplyDeleteகருத்துக்கு நன்றி சார்.
Deleteபுடலங்காய் வறுவல் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்... நாளைக்கே செய்டு பார்த்துடலாம் அம்மா...
ReplyDeleteசெய்து பாருங்கள் குமார். வருகைக்கு நன்றி.
Deleteபுடலங்காய் புடலைங்காய் என உள்ளதே, இருந்தாலும் வறுவல் அருமையே.
ReplyDeleteஎங்கள் ஊரில் புடலைங்காய் என்று தான் சொல்வோம். அதனால் தான் எழுதினேன். கருத்துக்கு நன்றி சார்.
Deleteஅருமையான பகிர்வு தோழி... செய்து பார்க்க வேண்டும்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.
ReplyDeleteSister, Today I tried this item,it is nice and enjoyed,
ReplyDeleteThanks
Thank you so much.
ReplyDeleteIts very nice
ReplyDeleteபுதுமையான ரெசிபி
ReplyDelete