Wednesday, October 21, 2015

சரஸ்வதி பூஜை / Sarawathi Pooja


தசராவின் ஒன்பதாவது நாளான இன்று சரஸ்வதி பூஜை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலங்களிலும் பூஜைகள் செய்து அன்னை சரஸ்வதியை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

சரஸ்வதியை வழிபடுவதற்கு முன்பு பூஜை செய்யும் இடத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். சரஸ்வதியின் படத்தையும் சுத்தப்படுத்தி சந்தணம், குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.

அன்னை சரஸ்வதியின் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன் வாழை இலையை விரித்து சரஸ்வதிக்கு பிடித்தமான சர்க்கரைப்பொங்கல், பூம்பருப்பு, புளியோதரை வைத்து அன்னையை வழிபட வேண்டும்.

தசரா எங்கள் ஊரில் மிகவும் பிரபலமான பண்டிகை ஆகும். இங்கு 12 அம்மன் கோவில்கள் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜையும் நடக்கும். சில வீடுகளில் கொலு வைத்திருப்பார்கள்.
கொலு பார்க்க வருபவர்களுக்கு சுண்டல் வகைகள், சர்க்கரைப்பொங்கல் கொடுத்து மகிழ்வார்கள். 10 நாட்களும் கோவில்களில்  பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

சரஸ்வதி பூஜை அன்று எல்லா அம்மனுக்கும் வெள்ளை நிற ஆடையில் அலங்காரம் செய்திருப்பார்கள். 23 ஆம் தேதி மாலையில் 12 சப்பரங்களும் பாளையங்கோட்டை மார்க்கெட் மைதானத்தில் வந்து நிற்கும். குழந்தைகளை மகிழ்விக்க ராட்டினங்கள், கடை வீதிகள் எல்லாம் இருக்கும்.
நாமும் சரஸ்வதி பூஜையை சிறப்பாக கொண்டாடுவோம். உங்கள் அணைவருக்கும் என்னுடைய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் !!

நன்றி
சாரதா 

25 comments:

  1. சரஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடுவோம்,

    ReplyDelete
  2. வணக்கம் சகோ இனிய ஆயுத பூஜை வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சகோ.

      Delete
  3. சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சார்.

      Delete
  4. இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  5. வாழ்த்துக்கு நன்றி அபிநயா.

    ReplyDelete
  6. சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சார்.

      Delete
  7. வணக்கம் அம்மா! தங்கள் தளத்திற்கு புதியவன்! தங்களுக்கு இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்! நன்றி

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பூபகீதன்.

      Delete
  8. வணக்கம்
    அம்மா
    இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ரூபன்.

      Delete
  9. இனிய சரஸ்வதிபூஜை நல்வாழ்த்துக்கள் அக்கா.
    உங்க வீட்டு கொலுவா.அழகா இருக்கு.
    பிரசாதம் நல்லாயிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும், பாராட்டிற்கும் நன்றி பிரியசகி.

      Delete
  10. கொலு ரொம்ப அழகாக உள்ளது. இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரி.

    சிறப்பான பதிவு. கொலுவுடன், படங்களும், அதன் விளக்கங்களும் அழகாயிருந்தன. தங்களுக்கும் இனிய சரஸ்வதி பூஜை, வியஜ தசமி நல்வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு நன்றி.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      தவறுதலாக விஜய தசமி என்பது மாறி வந்து விட்டது. திருத்திப் படிக்கவும். தவறுக்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. . திருத்தி படித்துக்கொண்டேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி

      Delete
  13. சரஸ்வதி தேவி அருள் பெற்ற பதிவு!
    வாழ்த்துகள் சகோ!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete

  14. சகோவின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  15. நல்ல பகிர்வு அம்மா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி குமார்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...