தேவையான பொருள்கள் -
- கடலைப்பருப்பு - 100 கிராம்
- காயத்தூள் - சிறிது
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- மல்லித்தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு
- கடலைப்பருப்பை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- ஊறிய பிறகு அதிலுள்ள தண்ணீரை நன்கு வடித்து விட்டு 4 மேஜைக்கரண்டி அளவு முழு பருப்பை தனியே எடுத்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- மீதமுள்ள பருப்புடன் காயத்தூள், உப்பு சேர்த்து மிக்ஸ்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்து வைத்துள்ள பருப்புடன் முழு பருப்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
- எலுமிச்சை அளவு மாவை கையில் எடுத்து வடைகளாக தட்டி பிளாஸ்டிக் பேப்பரில் வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து நான்கு வடைகளை போடவும். ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி போடவும்.
- இரு புறமும் நன்கு வெந்ததும் எடுத்து ஒரு டிஸ்யு பேப்பரில் வைக்கவும். எண்ணெய் உறிஞ்சியவுடன் டீயுடன் பரிமாறவும். இந்த அளவுக்கு 8 வடைகள் வரும்.
ஆஹா பருப்பு வடை ஸூப்பர் 2 மட்டும் எடுத்துக்கொண்டேன் சகோ
ReplyDeleteவாங்க சகோ முதல் வருகைக்கும் 2 வடை எடுத்து சாப்பிட்டதற்கும் நன்றி.
Deleteஆம் வடையா !!
ReplyDeleteபேஷ் பேஷ் !!
எனக்கு அது ரொம்ப பிடிக்கும்.
ஆனா இந்த வயிறு இப்ப எதைத் தின்னாலும்
ப்ரோடேஸ்ட் பண்ணுது.
அதுனாலே வடை நோ நோ.
வாடையை முகர்ந்து பார்த்து திருப்தி அடைய வேண்டியது தான்.
சுப்பு தாத்தா.
வாங்க சுப்பு தாத்தா முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர் வருகை தர வேண்டுகிறேன்.
Deleteவடையும் காபியும்..
ReplyDeleteஆகா... அருமை.. அருமை!..
கருத்துக்கு மிக்க நன்றி சார்.
Deleteஆஹா சூப்பரா இருக்கு... ஆனாலும் பண்ண தில்லை இதுவரை.உருண்டை குழம்புக்கே மாவுக்கு கடையில் இருந்து அனுப்ப சொல்லுவேன்.... வடை யெல்லாம் கொஞ்சம் கஷ்டம்....
ReplyDeleteகஷ்டமெல்லாம் ஒன்றும் இல்லை அபி. வடை செய்வது தான் மிகவும் சுலபம். செய்து பாரு.
ReplyDeleteருசித்தோம். நன்றி.
ReplyDeleteநன்றி சார்.
Deleteதன் மனைவியுடன் சண்டை போடும் கணவன்மார்களுக்கும் இது மிகவும் உபயோகமாக இருக்கும். எளிதான வழிமுறைகள் தானே. சரிசெய்து கொள்ளலாம்..
ReplyDeleteஎனது வலைப்பூவுக்கு முதன் முதலாக வருகை தந்து சொன்ன கருத்துக்கு நன்றி.
ReplyDeleteசூப்பரா இருக்கு. பருப்புவடை இதுவரை உண்மையில் செய்தது இல்லை.எனக்கும் வடைக்கும் வெகுதூரம். முயற்சிக்கிறேன் அக்கா.
ReplyDeleteகண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள் பிரியசகி. வருகைக்கு நன்றி.
Deleteமழைக்கு ஏற்ற உணவு! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteசகோதரி
ReplyDeleteஎங்கள் வீட்டு தீபாவளி ஸ்பெஷல் இது தான்!
இதுவல்லவோ சிறப்பு
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
மகிழ்ச்சி சகோ.
ReplyDeleteஆம வடை, பருப்பு வடை இரண்டும் ஒன்றா?
ReplyDelete