தேவையான பொருள்கள் -
- பாசிப்பருப்பு - 100 கிராம்
- அச்சுவெல்லம் - 5
- தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
- நெய் - 5 மேஜைக்கரண்டி
- முந்திரிப்பருப்பு - 5
- காய்ந்த திராட்சை - 5
- ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
- அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை இரண்டையும் வறுத்து தனியே வைக்கவும்.
- அதே கடாயில் தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.
- அதே கடாயில் பாசிப்பருப்பை வாசம் வரும் வரை வறுக்கவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து அதில் பாசிப்பருப்பு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- நீராவி அடங்கியதும் மூடியை திறந்து பருப்பை எடுத்து நன்கு மசித்து வைக்கவும்.
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அச்சு வெல்லத்துடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். அச்சு வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டி மீண்டும் அதே பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
- கொதிக்க ஆரம்பித்தவுடன் மசித்து வைத்திருக்கும் பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- இறுதியில் வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை, ஏலக்காய் தூள், மீதமுள்ள நெய் எல்லாவற்றையும் கலந்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். கிளாசில் ஊற்றி பரிமாறவும். சுவையான பாசிப்பருப்பு பாயசம் ரெடி.
எத்தனையோ வகை பாயாசம் இருந்தாலும் -
ReplyDeleteபாசிப்பருப்பு பாயாசம் சிறப்பானது..
அருமை..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
Deleteஆஹா எனக்கு ரொம்ப பிடித்த பாயாசம்.சூப்பர்மா கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteபிடித்த பாயசத்தை உடனே செய்து அசத்தி விடுங்கள் அபிநயா.
Deleteஆகா சூப்பரா இருக்கே வாசம் தூக்குதுப்பா ..!
ReplyDeleteவாசம் கனடா வரை வந்தால் பாயசம் நன்றாகத்தான் இருக்கும். வருகைக்கு நன்றி.
Deleteஅருமையான பாயசம். உங்கள் புகைப்படம் என்னை மீண்டும் செய்யத்தூண்டுகிறது!
ReplyDeleteகண்டிப்பாக செய்து விடுங்கள் அக்கா.
Deleteஅருமைம்மா,,,, நான் செய்யும் பாயசம் இது ஒன்னு தான்,,,,
ReplyDeleteதோளுடன் இருக்கும் பாசிபருப்பில் வறுத்து, தோள் நீக்கி செய்வேன்,,,,,,
தங்கள் பகிர்வு அருமை, வாழ்த்துக்கள்,
வருகைக்கு நன்றி மகேஸ்வரி.
Deleteநல்ல சத்தான பாயசம்;அருமை
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
ReplyDeleteஆஹா ஆசையாய் இருக்கிறதே..
ReplyDeleteஆசையாக இருந்தால் பாயசத்தை ருசித்திருக்கலாமே சகோ.
Deleteஎன்ன இப்படி பண்றீங்களே அக்கா..!!! பார்க்கவே சூப்பரா இருக்கு பாயாசம். கண்டிப்பா செய்துடனும்ன்னு இருக்கேன். அருமை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteகண்டிப்பாக செய்து விடுங்கள் பிரியசகி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteவெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு நிவேதனம் இந்த பாயசம்தான்! தேங்காய் துருவல் நாங்கள் சேர்ப்பதில்லை!
ReplyDeleteநீங்கள் சொல்வது சரி தான் சார். வருகைக்கு நன்றி.
ReplyDeleteபாயசம் கண்டோம், ரசித்தோம், குடித்தோம்.
ReplyDeleteபாயசத்தை ரசித்து குடித்தமைக்கு நன்றி சார்.
Deleteவணக்கம் சகோதரி.
ReplyDeleteபாசிப் பருப்பு பாயாசம் மிக அருமை சகோதரி. செய்முறைகளும், ஒவ்வொரு நிலையிலும் படங்களும், என்னை உடனை செய்து சாப்பிடச் சொல்கின்றன. நானும் அடிக்கடி செய்வேன். தேங்காய் சிறு பல்லாக அரிந்து நெய்யில் வறுத்துப் போட்டு செய்வேன். தங்கள் பாணியிலும் ஓர் நாள் செய்து பார்க்கிறேன். நன்றி .
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.
சிறந்த வழிகாட்டல்
ReplyDeleteதொடருங்கள்
http://www.ypvnpubs.com/
வருகைக்கு நன்றி சார்.
ReplyDeleteYummy ma
ReplyDeleteThank you Mohana
ReplyDeletemadam first time i"ll make
ReplyDelete