Sunday, October 25, 2015

பாகற்காய் மசாலா / Bittergourd Masala

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாகற்காய் - 2
  2. தக்காளி - 1
  3. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  4. மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி 
  5. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. மல்லித்தழை - சிறிது 
  8. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. பெரிய வெங்காயம் -1
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. பாகற்காய், வெங்காயம், தக்காளி மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
  4. பிறகு அதனுடன் பாகற்காய் துண்டுகளை போட்டு ஒரு  நிமிடம் கிளறி அதோடு 1/2 தம்ளர் தண்ணீரும், உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். 
  5. கொதிக்க ஆரம்பித்ததும் மூடி போட்டு 10 நிமிடம் அல்லது தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.
  6. தண்ணீர் நன்கு வற்றியதும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான பாகற்காய் மசாலா ரெடி.

24 comments:

  1. அருமை அம்மா! இன்று தங்கள் முட்டை பிரியாணி செய்துபார்த்தேன் அருமையாக இருந்தது! இதற்கு முன்னால் எனக்கு தெரிஞ்சமாதிரி செய்வேன்! இனிமே தங்கள் ரெசிபியை பார்த்துதான் செய்யவேண்டும் அனைத்தும் செய்ய எளிதாகவும் சுவையாகவும் இருக்கு! மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. முட்டை பிரியாணி செய்து பார்த்து சொன்ன கருத்துக்கு நன்றி பூபகீதன். என்னுடைய குறிப்புகளை பார்த்து செய்யும் போது போட்டோ எடுத்து நீங்கள் கொடுக்கும் கருத்தோடு சேர்த்து இணைக்கலாம்.

      Delete
  2. உங்க செய்முறையைப் பார்த்தால் ,பாவக்காய் கூட கசக்காது போலிருக்கே :)

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  3. உடல் நலனுக்கு மிகவும் உகந்தது பாகற்காய்..

    நல்லதொரு குறிப்பு.. வாழ்க நலம்..

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  5. பாகற்காய் எனக்கு பிடித்தமானவை சகோ

    ReplyDelete
  6. நீரிழிவுக்காரருக்கு நல்மருந்து
    பாகற்காய் தானே
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார் நீங்கள் சொல்வது சரி தான். வருகைக்கு நன்றி.

      Delete
  7. ம்..ம் எனக்கு பாவற்காய் நன்றாகப் பிடிக்கும் நாம் புழி விட்டு ச் செய்வோம் இதே போலவே நன்றாக இருக்கும் கசக்காது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  8. நானும் போன வாரம் இதே போல செய்தேன் அம்மா.. ஆனால் சீரகத்தூள் மட்டும் சேர்க்கலை. அடுத்த முறை இது போல ட்ரை பண்றேன்..

    ReplyDelete
  9. அபி ஊரிலிருந்து வந்தாச்சா ? கண்டிப்பாக இந்த முறையிலும் செய்து பாரு.

    ReplyDelete
    Replies
    1. ஞாயிறு அதிகாலை வந்தேன் அம்மா.. நீங்க சொன்ன மாதிரி ரொம்பவே கூட்டம்...

      Delete
  10. வரும் ஞாயிறு நளபாகத்தில் இதுதான்!

    ReplyDelete
    Replies
    1. செய்து அசத்துங்கள் சார்.

      Delete
  11. பாகற்காய் மசாலா சுவைத்தேன்! நன்றி!

    ReplyDelete
  12. பாகற்காயை சுவைத்து பார்த்தற்கு நன்றி சார்.

    ReplyDelete
  13. வணக்கம் அம்மா! நான் எழுத ஆரம்பித்து 100நாட்கள்தான் ஆகிறது! எழுத வேண்டும் என்கிற விருப்பத்தில் தற்சமயம் கணினி /மடிகுகணினி இல்லாததால் கைபேசியில்தான் எழுது வருகிறேன்! எனக்கு பின்னுட்டமிட வரும் அனைத்து நண்பர்களுக்கும் இது தெரியும் என்பதால் தொடர்ந்து ஊக்கப்படுத்திவருகிறார்கள்! தாங்களும் நேரம் கிடைக்கும்போது தங்கள் கருத்துக்களை பதிந்தால் என்னை செம்மை படுத்த ஏதுவாக இருக்கும்! கைபேசியில் எழுதினால் கணினி டாஸ்போர்ட் "க்கு என் பதிவுகள் தெரியாது! மிக்க நன்றி அம்மா!!!

    ReplyDelete
  14. விரிவான விளக்கத்திற்கு நன்றி பூபகீதன்.

    ReplyDelete
  15. வணக்கம்
    அம்மா
    செய்முறை விளக்கத்துடன் அசத்தல் நன்று வாழ்த்துக்கள்
    எனது பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உன் நினைவுக் கீற்றுக்கள்:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. வருகைக்கு நன்றி ரூபன். உங்கள் கவிதைக்கு கருத்து சொல்லி விட்டேன்.

    ReplyDelete
  17. பாகற்காய் சமையல் மிகவும் அருமை அம்மா.. எளிய செய்முறை விளக்கம். முயற்சி செய்து பார்க்கிறேன்.. எனது வலைப்பு பக்கம் வந்து அன்னையும் ஊக்கப்படுத்துங்கள் அம்மா, உங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...