Friday, October 2, 2015

காந்தி ஜெயந்தி / Gandhi Jeyanthi



காந்தி பிறந்த நாளான இன்று காந்தி ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

                                         மகாத்மா காந்தி பற்றி ஒரு சிறிய பதிவு

தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்ற இடத்தில் கரம்சந்த் காந்திக்கும் புத்திலிபாய்க்கும் மகனாக பிறந்தார்.

பள்ளியில் படிக்கும் போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தனது 13 வது வயதில் கஸ்தூரி பாயை மணந்து கொண்டார். தன்னுடைய 18 ஆம் வயதில் பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார்.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ஆகஸ்ட் புரட்சி என்று அழைக்கப்படும் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தை தொடங்கினார். அவரது மனஉறுதியை கண்டு ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால் 1947 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி இந்தியாவில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்கள், நிறுவனங்கள் எல்லாவற்றுக்கும் தேசிய விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

காந்தியின் அறவழி சென்று நாமும் அவரை தலை வணங்கி இந்தியாவை மேலும் சிறப்படைய செய்வோம் !!!

நன்றி
சாரதா

15 comments:

  1. காந்திஜியின் இந்நாளை நினைவு கூர்வோம் சகோ பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றிமா,,,
    அவரின் நினைவினைப் போற்றுவோம்,

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி மகேஸ்வரி.

    ReplyDelete
  4. அருமையான நினைவு கூரல்!
    இன்று தொலைகாட்சியில்காந்தி படம் பார்த்தேன்

    ReplyDelete
  5. அண்ணல் காந்திஜியின் வரலாற்றுப் பதிவினைக் கண்டு மகிழ்ச்சி..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு அம்மா....
    காந்திஜியை நினைவில் நிறுத்துவோம்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி குமார்.

      Delete
  8. நன்னாளில் ஒரு நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நல்லதொரு நினைவுப் பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  10. வணக்கம் சகோதரி.

    காந்தி ஜயந்தியன்று அவரைப் பற்றி நல்ல முறையில் ஒருநினைவுப் பகிர்வு. பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி சகோதரி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...