தையல் டிப்ஸ்கள்


  1. தையல் மிசினுக்கு இரண்டு நாளைக்கு ஒரு தடவை கண்டிப்பாக எண்ணெய் விட வேண்டும். எண்ணெய் விட்டவுடன் சிறிது நேரம் கழித்து ஒரு பழைய துணியை தைத்து விட்டு பிறகு புது துணியை தைக்க வேண்டும்.
  2. புதிதாக தையல் பழகுபவர்கள் முதலில் நியூஸ் பேப்பரை வைத்து தைத்து பழக வேண்டும். பிறகு கர்சீப்பில் ஓரம் அடித்து பழக வேண்டும்.
  3. பட்டன், கொக்கி, கிழிந்ததை இணைத்து தைத்தல், புடவைகளுக்கு ஓரம் அடித்தல், ரெடிமேடில் வாங்கிய சுடிதார்களுக்கு அதன் மேல் இன்னொரு தையல் போடுவது போன்ற சின்னசின்ன தையல் வேலைகளை கற்றுக் கொள்வது மிகவும் அவசியம்.
  4. ஒரு சிறிய குஷனில் கொஞ்சம் ஊசிகளையும், குண்டுசிகளையும் குத்தி வைத்துக்கொண்டால் தைக்கும் போது எளிதாக எடுத்துக் கொள்ளலாம்.
  5. பிளவுஸ் தைக்க தெரிந்தவர்கள் பிளவுஸ் வெட்டியவுடன் எல்லாவற்றையும் எடுத்து மடித்து ஒரு ரப்பர் பேன்ட் போட்டு வைக்கவும்.
  6. பிளவுஸ் கலருக்கு தக்கபடி வாங்கிய கலர் நூல்களை ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும். அல்லது ஒரு த்ரெட் ஸ்டாண்ட் வாங்கி இந்த முறையில் வைத்துக் கொள்ளலாம். பிளவுஸ் தைப்பதற்கு முன்னால் எடுக்க வசதியாக இருக்கும்.                             
  7. ஆறு பாபின்கள் வரை வாங்கி வைத்துக் கொள்ளவும். கொக்கி, வளையம் இரண்டையும் தனித் தனியாக ஒரு சிறிய டப்பாவில் போட்டு வைக்கவும்.

9 comments:

  1. ஆஹா அருமையான டிப்ஸ் அம்மா...
    நான் தையல் தொழில்தான்
    செய்றேன் அம்மா....
    இந்த டிப்ஸ் புதிதாய் கற்பவர்களுக்கு
    உதவும்....
    நன்றி அம்மா வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கு நன்றி அஜய். நானும் ஓரளவு தைப்பேன்.

    ReplyDelete
  3. Useful tips for biggners. Thank you ma.

    ReplyDelete
  4. Useful tip's thank you so much ma

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...