Monday, August 22, 2016

அவரைக்காய் சாம்பார் / Avaraikai Sambar


பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. துவரம் பருப்பு - 200 கிராம் 
  2. அவரைக்காய் - 100 கிராம் 
  3. தக்காளி - 1
  4. வெங்காயம் - சிறிது 
  5. புளி - சிறிய எலுமிச்சை அளவு 
  6. சாம்பார் தூள் - 2 மேஜைக்கரண்டி 
  7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. காயத்தூள் - 1/2 
  9. மல்லித்தழை - சிறிது 
  10. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. மிளகாய் வத்தல் - 2
  3. சீரகம் - 1 தேக்கரண்டி 
  4. வெங்காயம் - சிறிது 
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. குக்கரில் பருப்பு மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதோடு காயத்தூள் சேர்த்து 4 விசில் வரை வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
  2. புளியை தண்ணீரில் ஊற வைத்து இரண்டு கப் அளவுக்கு கரைத்து வைக்கவும்.
  3. அவரைக்காய், வெங்காயம், தக்காளி, மல்லித்தழை எல்லாவற்றையும் நறுக்கி வைக்கவும்.
  4. அடுப்பில் கடாயயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அவரைக்காய், வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் சேர்த்து லேசாக வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
  5. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து புளித்தண்ணீர் வதக்கிய அவரைக்காய், தக்காளி, வெங்காயம், சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  6. மசாலா வாடை போனதும் அவித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து கலக்கவும். இறுதியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  7. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 3 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், சீரகம் போடவும். சீரகம் பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  8. வெங்காயம் பொன்னிறமானதும் எடுத்து குழம்பில் ஊற்றி கலக்கி விடவும். சுவையான அவரைக்காய் சாம்பார் ரெடி.

Tuesday, August 9, 2016

இட்லி மஞ்சூரியன் / Idli Manchurian

இட்லியை வைத்து எப்போதும் இட்லி உப்புமா தான் செய்வோம். இப்போது இட்லியை வைத்து  மஞ்சூரியன் எப்படி செய்வதென்று பார்ப்போம் !

தேவையான பொருள்கள் -
  1. இட்லி - 4
  2. பெரிய வெங்காயம் - 1
  3. பச்சை மிளகாய் - 1
  4. இஞ்சி - சிறிய துண்டு 
  5. பூண்டு பற்கள் - 4
  6. தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி 
  7. சோயா சாஸ் - 1 மேஜைக்கரண்டி 
  8. மல்லித்தழை - சிறிது 
  9. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  10. உப்பு - சிறிது 
செய்முறை -
  1. இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். பெரிய  வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மல்லித்தழை  எல்லாவற்றையும் பொடிதாக  நறுக்கி வைக்கவும்.
  2. தக்காளி சாஸ், சோயா சாஸ் இரண்டையும் சேர்த்து கலக்கி ஒரு பௌலில் வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. பச்சை வாடை போனதும் தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறி பிறகு அதனுடன் வெட்டி வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும்.
  5. இட்லியில் உப்பு இருப்பதால் உப்பு சரி  பார்த்து தேவைப்பட்டால்  சிறிது சேர்த்துக் கொள்ளவும். இறுதியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான இட்லி மஞ்சூரியன் ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...