Tuesday, August 9, 2016

இட்லி மஞ்சூரியன் / Idli Manchurian

இட்லியை வைத்து எப்போதும் இட்லி உப்புமா தான் செய்வோம். இப்போது இட்லியை வைத்து  மஞ்சூரியன் எப்படி செய்வதென்று பார்ப்போம் !

தேவையான பொருள்கள் -
  1. இட்லி - 4
  2. பெரிய வெங்காயம் - 1
  3. பச்சை மிளகாய் - 1
  4. இஞ்சி - சிறிய துண்டு 
  5. பூண்டு பற்கள் - 4
  6. தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி 
  7. சோயா சாஸ் - 1 மேஜைக்கரண்டி 
  8. மல்லித்தழை - சிறிது 
  9. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  10. உப்பு - சிறிது 
செய்முறை -
  1. இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். பெரிய  வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மல்லித்தழை  எல்லாவற்றையும் பொடிதாக  நறுக்கி வைக்கவும்.
  2. தக்காளி சாஸ், சோயா சாஸ் இரண்டையும் சேர்த்து கலக்கி ஒரு பௌலில் வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. பச்சை வாடை போனதும் தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறி பிறகு அதனுடன் வெட்டி வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும்.
  5. இட்லியில் உப்பு இருப்பதால் உப்பு சரி  பார்த்து தேவைப்பட்டால்  சிறிது சேர்த்துக் கொள்ளவும். இறுதியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான இட்லி மஞ்சூரியன் ரெடி.

10 comments:

  1. செய்முறையும், படங்களும் கவர்கின்றன. ஒருமுறை இதைப்போல ஹோட்டலில் சாப்பிட்டபிறகு ஒரே ஒரு முறை வீட்டிலும் முயற்சித்துப் பார்த்திருக்கிறோம்!

    ReplyDelete
  2. இட்லி மஞ்சூரியன் என்ற பேர் தான் புதியது..

    இங்கே செய்வதுண்டு.. சோயா சாஸ் சேர்ப்பதில்லை.. தக்காளியை சற்று வதக்கி தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அடித்துக் கொள்வேன்..

    அருமை..

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சார். உங்கள் செய்முறையும் தெரிந்து கொண்டேன்.

      Delete
  3. அருமையான செய்முறை. ஐந்து நட்சத்திர ஓட்டலில் மண்பானையில் இதை சூடாய் வைத்து அதிக காசு வாங்கி விடுவார்கள் நம்மிடம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கும், விபரம் சொன்னதற்கும் நன்றி அக்கா.

      Delete
  4. வணக்கம் சகோதரி

    படத்துடன் செய்முறை விளக்கங்கள் அருமை. இரவு இட்லி மீந்து போனால், வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு உதிர்த்து டிபனாக சாப்பிடுவோம். தக்காளி சாஸ், சோயா சாஸ் எதுவும் சேர்த்ததில்லை. இனி ஒரு சமயம் அவ்வாறே சேர்த்து செய்து பார்க்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. வருகைக்கும் விபரமான கருத்துக்கும் நன்றி சகோதரி.

    ReplyDelete
  6. நான் இட்லியை சிறு துண்டாக்கி தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி அதில் போட்டு எடுத்துச் சாப்பிடுவேன்.. சுவையாக இருக்கும்.. இனி இந்த முறையில் செய்து பார்க்கிறேன்..

    ReplyDelete
  7. வணக்கம் !

    இட்லியில் செய்த இனிய நல்லுணவு
    அட்டகாசம் !


    இரண்டு மாதங்களின் பின்னர் இன்றுதான் ஒருநாள்விடுமுறை கிடைத்தது அதுதான் வலைப்பக்கம் வந்தேன் நன்றி
    வாழ்க நலம் ! நேரம் கிடைக்கும் போது வருகிறேன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...