பரிமாறும் அளவு - 4 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- துவரம் பருப்பு - 200 கிராம்
- அவரைக்காய் - 100 கிராம்
- தக்காளி - 1
- வெங்காயம் - சிறிது
- புளி - சிறிய எலுமிச்சை அளவு
- சாம்பார் தூள் - 2 மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- காயத்தூள் - 1/2
- மல்லித்தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- மிளகாய் வத்தல் - 2
- சீரகம் - 1 தேக்கரண்டி
- வெங்காயம் - சிறிது
- கறிவேப்பிலை - சிறிது
- குக்கரில் பருப்பு மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதோடு காயத்தூள் சேர்த்து 4 விசில் வரை வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
- புளியை தண்ணீரில் ஊற வைத்து இரண்டு கப் அளவுக்கு கரைத்து வைக்கவும்.
- அவரைக்காய், வெங்காயம், தக்காளி, மல்லித்தழை எல்லாவற்றையும் நறுக்கி வைக்கவும்.
- அடுப்பில் கடாயயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அவரைக்காய், வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் சேர்த்து லேசாக வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
- அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து புளித்தண்ணீர் வதக்கிய அவரைக்காய், தக்காளி, வெங்காயம், சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- மசாலா வாடை போனதும் அவித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து கலக்கவும். இறுதியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 3 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், சீரகம் போடவும். சீரகம் பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் எடுத்து குழம்பில் ஊற்றி கலக்கி விடவும். சுவையான அவரைக்காய் சாம்பார் ரெடி.
அவரைக்காய் சாம்பார்.. சொல்லவும் வேண்டுமோ!..
ReplyDeleteஅருமை.. அருமை!..
கருத்துக்கு நன்றி சார்.
Deleteரசித்தேன். ருசித்தேன்.
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்.
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
செய்முறை விளக்கத்துடன் அசத்தி விட்டீர்கள் நிச்சயம் வீட்டில் செய்து சாப்பிடுகிறோம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி ரூபன். செய்து பாருங்கள்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅவரைக்காய் சாம்பார் செய்முறை மிகவும் நன்றாக இருந்தது. நானும் இதை செய்திருக்கிறேன்.ஆனால், சீரகம் மட்டும் இல்லாமல், இனி இந்த சாம்பார் செய்யும் சமயம் தங்கள் குறிப்பின்படி செய்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருகைக்கு நன்றி சகோ. இந்த முறையிலும் செய்து பாருங்கள்.
Deleteஎளிமையாக சொல்லிக்கொடுப்பது உங்கள் சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.
ReplyDeleteபடத்துடன் விளக்கம் அருமை அம்மா...
ReplyDeleteநல்லாயிருக்கு..நானும் இப்படிதான் அம்மா வைப்பேன்.. ஆனால் வதக்க மாட்டேன்.. நேரடியாக
ReplyDeleteவேக வைப்பேன்.. ஒரு நாள் வதக்கி பார்க்கிறேன்..
இந்த முறையிலும் செய்து பாரு அபி. நன்றாக இருக்கும்.
ReplyDelete