பாதாம் பர்பி / Badham Burfi
தேவையான பொருள்கள் -
- பாதாம் பருப்பு - 200 கிராம்
- சீனி - 300 கிராம்
- பால் - 100 மில்லி
- இனிப்பில்லாத கண்டஸ்டு மில்க் - 100 மில்லி
- கேசரி கலர் - சிறிது
- நெய் - 4 மேஜைக்கரண்டி
செய்முறை -
- முதலில் பாலை லேசாக சூடு பண்ணி அதில் பாதாம் பருப்பை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- ஊறிய பிறகு பாதாம் பருப்பின் தோலை எடுத்து ஊற வைத்துள்ள பாலோடு சேர்த்து மிக்ஸ்யில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு டிரேயில் 2 மேஜைக்கரண்டி நெய்யை தடவி தனியாக வைக்கவும்.
- அடுப்பில் நான்ஸ்டிக் கடாயை வைத்து அரைத்து வைத்துள்ள பாதாம் பருப்பு கலவையை போட்டு 3 நிமிடம் வரை இடை விடாமல் கிளறவும்.
- பிறகு சீனியை சேர்த்து நன்றாக கிளறவும். இறுதியில் கண்டன்ஸ்டு பால், கேசரி கலர், மீதமுள்ள நெய் சேர்த்து பர்பி பதம் வரும் வரை இடை விடாமல் கிளறவும்.
-
பர்பி பதம் வந்தவுடன் நெய் தடவிய டிரேயில் பரப்பவும். லேசாக சூடு இருக்கும் போது துண்டுகள் போடவும்.
ஆஹா... சுவை.
ReplyDeleteஇந்த மாதிரி செய்யவேண்டும் என்று நினைப்பதுண்டு..
ReplyDeleteஆனால், நேரம் கூடி வருவதில்லை..
இனி விடக்கூடாது.. அவசியம் செய்துவிட வேண்டியது தான்!..
நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக செய்து பாருங்கள் சார்.
Deleteஅருமை. தீபாவளிக்கு மட்டும் செய்வேன், மற்ற நேரம் செய்ய வளையாது.
ReplyDeleteகருத்துக்கு நன்றி சகோ.
Deleteஆஹா.... அருமை....
ReplyDeleteகருத்துக்கு நன்றி குமார்.
ReplyDeleteஇனிப்புக்கு நன்றி!
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்.
ReplyDeleteஅருமையான குறிப்பு! நான் வேறு மாதிரி செய்வேன். இனிப்பில்லாத கண்டென்ஸ்ட் மில்க் கடையில் கிடைக்கிறதா?
ReplyDeleteஇனிப்பில்லாத கண்டெஸ்ட் மில்க் கடைகளில் கிடைக்கிறது. இனிப்புள்ள கண்டென்ஸ்ட் மில்க் உபயோகித்தால் சீனியின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள். வருகைக்கு நன்றி அக்கா.
ReplyDelete