தேவையான பொருள்கள் -
- உருளைக்கிழங்கு - 3
- பிரஷ் பட்டாணி - 100 கிராம்
- காலிபிளவர் - 100 கிராம்
- கேரட் - 1 சிறியது
- குடமிளகாய் - 1
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
- காஷ்மீரி மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
- பாவ் பாஜி மசாலா - 1 மேஜைக்கரண்டி
- வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- மல்லித்தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் தோல் சீவி வெட்டி வைக்கவும். காலி பிளவரையும் நறுக்கி வைக்கவும்.
- குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், காலிபிளவர், மற்றும் பட்டாணி, சிறிது உப்பு சேர்த்து 3 விசில் வரும் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
- நீராவி அடங்கியதும் மூடியை திறந்து வெந்த காய்கறிகளை ஒரு மத்து கொண்டு நன்கு மசித்து கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளி, குடமிளகாய், மல்லித்தழை எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- பச்சை வாடை போனதும் நறுக்கி வைத்துள்ள குடமிளகாய் சேர்த்து வதக்கவும். குடமிளகாய் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் காஷ்மீரி மிளகாய் தூள், பாவ் பாஜி மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும்.
- பிறகு மசித்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி 100 மில்லி தண்ணீரை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். உப்பு சரி பார்த்து தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். மூடி போட்டு கொதிக்க விடவும்.
- மசாலா கெட்டியானதும் வெண்ணெய் சேர்த்து கிளறி பிறகு மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். பாவ் பாஜி மசாலா ரெடி.
மும்பை ஸ்பெஷல் ஸூப்பர் சகோ
ReplyDeleteகருத்துக்கு நன்றி சகோ.
Deleteபன்னை வெட்டி நடுவில் வைக்க வேண்டாமா? நல்ல குறிப்புகள்.
ReplyDeleteபன்னை நடுவிலும் வைக்கலாம். இப்படியும் வைத்துக் கொள்ளலாம் சகோ.
Deleteபடங்களுடன் விளக்கம் அருமை அம்மா..
ReplyDeleteகருத்துக்கு நன்றி குமார்.
ReplyDeleteசெய்முறை நல்லாருக்கு. விரைவில் செய்துபார்க்கிறேன்.
ReplyDeleteகண்டிப்பாக செய்து பாருங்கள். வருகைக்கு நன்றி.
ReplyDeleteஆகா அருமை ...
ReplyDeleteவிளக்கமும் ,செய்முறையும் அசத்தல்...
http://snowwhitesona.blogspot.in/
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சங்கீதா.
ReplyDelete