Friday, October 14, 2016

வீட்டில் பனீர் தயாரிக்கும் முறை / Home made Paneer


தேவையான பொருள்கள் -
  1. பால் - 1 லிட்டர்  
  2. எலுமிச்சம் பழம் - 1
செய்முறை -
  1. எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும். பால் கொதித்தது பொங்கி வரும் போது எலுமிச்சை சாறை ஊற்றி ஒரு கரண்டியால் நன்கு கலக்கி விடவும்.
  3. பால் திரிந்து இதே போல் வரும். பால் திரிந்தும் அடுப்பை அணைத்து விடவும்.
  4. திரிந்த பாலை ஒரு மெல்லிய காட்டன் துணியில் வடி கட்டவும். பிறகு துணியை சுருட்டி தண்ணீரை நன்கு பிழியவும்.
  5. துணி மூட்டையை ஒரு பலகை அல்லது தட்டு மேல் வைத்து அதன் மேல் ஒரு கனமான தட்டையான பொருளை அதன் மேல் வைக்கவும். கனமான பொருள் இல்லையென்றால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதன் மேல் வைக்கவும்.
  6. இரண்டு மணி நேரம் கழித்து பார்க்கும் போது நன்கு கெட்டியாகி விடும். பின்பு துண்டுகள் போடவும்.
  7. பனீர் துண்டுகளை ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு பிரிஜ்ஜில் வைத்துக் கொள்ளவும். தேவையான போது எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம். ஒரு லிட்டர் பாலுக்கு 20 பனீர்  துண்டுகள் வரும்.    

14 comments:

  1. புகைப்படமே ஆசையை தூண்டி விட்டது சகோ.

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகைக்கு நன்றி சகோ.

      Delete
  2. அருமை. நானும் இப்படித்தான் செய்வேன்,

    ReplyDelete
    Replies
    1. உங்கள் செய்முறையும் இது தான் என்பதை அறிந்து மகிழ்ச்சி சகோ.

      Delete
  3. படங்களுடன் செய்முறை அருமை.

    ReplyDelete
  4. சுலபமாக இருக்கிறது.

    ReplyDelete

  5. அருமையான உணவு செய்முறை வழிகாட்டல்

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சார்.

      Delete
  6. Fresh and healthy home made paneer....looks so spongy. Please check http://rarelicious.wordpress.com for kids friendly, millets and some South Indian recipes.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...