தேவையான பொருள்கள் -
- அரிசி மாவு - 1 கப்
- கடலை மாவு - 1 /2 கப்
- பொட்டுக் கடலை மாவு - 1/2 கப்
- மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி
- நெய் - 2 மேஜைக்கரண்டி
- காயத் தூள் - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- சுடுவதற்கு எண்ணெய் - தேவையான அளவு
- அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக் கடலை மாவு மூன்றையும் தனித் தனியாக சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக் கடலை மாவு, மிளகாய் தூள், காயத் தூள், நெய், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக பிசைந்து வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து முறுக்கு குழலில் ரிப்பன் பக்கோடா அச்சை போட்டு பிசைந்த மாவை குழாய் கொள்ளும் அளவுக்கு நிரப்பி வட்டமாக பிழிந்து விடவும்.
- ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விடவும். இரு புறமும் வெந்ததும் எடுத்து ஒரு டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.
- எண்ணெய் உறிஞ்சியவுடன் சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். டீயுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
பார்க்கவே அழகு.
ReplyDeleteசெய்முறை அருமை.
தீபாவளி சமயத்துக்கேற்ற பதிவு. நெய்க்கு பதிலாக சுட்ட எண்ணெய் கூட விட்டுக் கொள்ளலாம் இல்லை? படங்களுடன் பார்க்கவே நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஆஹா பெயரே வித்தியாசமாக இருக்கின்றதே...
ReplyDeleteரிப்பன் பகோடா.. - மிகவும் விருப்பமான ஒன்று!..
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துகள்!..
Arumai
ReplyDeleteஅருமை.பார்க்கவே அழகு.👌
ReplyDeleteThank you
Delete