Monday, May 29, 2017

தக்காளி தோசை / Tomato Dosa


தேவையான பொருள்கள் -
  1. தோசை மாவு - 1 கப் 
  2. சிறிய தக்காளி - 2
  3. சின்ன வெங்காயம் - 10
  4. மிளகாய் வத்தல் - 2
  5. சீரகம் - 1 தேக்கரண்டி 
  6. மல்லித்தழை - சிறிது 
  7. கறிவேப்பிலை - சிறிது 
  8. நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  9. உப்பு - சிறிது
செய்முறை -
  1. தக்காளி, வெங்காயம் இரண்டையும் வெட்டி வைக்கவும். மிளகாய் வத்தலை இரண்டாக ஒடித்து வைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை வறுத்து தனியே வைக்கவும்.
  3. அதே எண்ணெயில் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி நன்கு வதங்கியதும் சீரகம், சிறிது உப்பு,மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும். வதக்கிய பொருள்களை சிறிது நேரம் ஆறவிடவும்.
  5. நன்கு ஆறியதும் மிக்ஸியில் அரைத்து தோசை மாவோடு சேர்த்து நன்றாக கலக்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் தேய்க்கவும். தோசைக்கல் சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விடவும்.
  7. ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Wednesday, May 24, 2017

ராகி பூரி / Ragi Poori


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. ராகி மாவு - 1/2 கப் 
  2. கோதுமை மாவு - 1/2 கப் 
  3. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி 
  4. லேசாக சூடு படுத்திய தண்ணீர் - 1/2 கப் 
  5. உப்பு - தேவையான அளவு 
  6. சுடுவதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய், உப்பு எல்லாவற்றையும் நன்றாக கலந்து அதில் சிறிது சிறிதாக லேசாக சூடு படுத்திய தண்ணீரை ஊற்றி ஓரளவு கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு தடவை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிக்கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பூரிகளை ஒவொன்றாக போட்டு எடுக்கவும்.
  4. இருபுறமும் பொன்னிறமானவுடன் எடுத்து விடவும். சுவையான ராகி பூரி ரெடி.
குறிப்புகள் -
  1. எண்ணெய் நல்ல சூடாக இருக்க வேண்டும். எண்ணெய் சூடாகும் முன் பூரியைப் போட்டால் உப்பி வராது.
  2. மாவை பிசைந்து அதிக நேரம் வைத்தால் எண்ணெயை அதிகமாக உறிஞ்சி விடும்.

Tuesday, May 9, 2017

வெஜ் புலாவ் / Veg Pulao


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாஸ்மதி அரிசி - 1 கப் 
  2. பிரஷ் பட்டாணி - 50 கிராம் 
  3. காலிபிளவர் - 50 கிராம் 
  4. கேரட் - 50 கிராம் 
  5. பீன்ஸ் - 50 கிராம் 
  6. பச்சை மிளகாய் - 3
  7. தக்காளி - 1
  8. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 
  9. தேங்காய் பால் - 1 கப் 
  10. மல்லித்தழை - சிறிது 
  11. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  2. நெய் - 2 மேஜைக்கரண்டி 
  3. பட்டை - 1 இன்ச் அளவு 
  4. கிராம்பு - 2
  5. பெரிய வெங்காயம் - 1
செய்முறை -
  1. பாஸ்மதி அரிசியை தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும். காலிபிளவர், கேரட், பீன்ஸ், தக்காளி எல்லாவற்றையும் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
  2. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு அதனுடன் பட்டாணி, நறுக்கி வைத்துள்ள காலிபிளவர், கேரட், பீன்ஸ் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி ஒரு கப் தேங்காய் பால்,  2 கப் தண்ணீர்,  மற்றும் உப்பு, சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து மூடவும்.
  5. நீராவி வந்ததும் வெயிட் போட்டு 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும் சுவையான வெஜ் புலாவ் ரெடி.

Monday, May 1, 2017

பொட்டுக்கடலை சட்னி / பொரி கடலை சட்னி / Fried Gram Chutney


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பொட்டுக்கடலை - 1/2 கப் 
  2. தேங்காய் துருவல் - 1/2 கப் 
  3. மிளகாய் வத்தல் - 2
  4. பெரிய வெங்காயம் - 1
  5. தக்காளி - 1
  6. இஞ்சி - ஒரு சிறிய துண்டு 
  7. பூண்டுப்பல் - 2 
  8. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் வெட்டி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். 
  3. தக்காளி வதங்கியதும் பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், மிளகாய் வத்தல் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. நன்கு வதங்கியதும் சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பிறகு உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான பொட்டுக்கடலை சட்னி ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...