தேவையான பொருள்கள் -
- தோசை மாவு - 1 கப்
- சிறிய தக்காளி - 2
- சின்ன வெங்காயம் - 10
- மிளகாய் வத்தல் - 2
- சீரகம் - 1 தேக்கரண்டி
- மல்லித்தழை - சிறிது
- கறிவேப்பிலை - சிறிது
- நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
- உப்பு - சிறிது
- தக்காளி, வெங்காயம் இரண்டையும் வெட்டி வைக்கவும். மிளகாய் வத்தலை இரண்டாக ஒடித்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை வறுத்து தனியே வைக்கவும்.
- அதே எண்ணெயில் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் சீரகம், சிறிது உப்பு,மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும். வதக்கிய பொருள்களை சிறிது நேரம் ஆறவிடவும்.
- நன்கு ஆறியதும் மிக்ஸியில் அரைத்து தோசை மாவோடு சேர்த்து நன்றாக கலக்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக்கொள்ளவும்.
- அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் தேய்க்கவும். தோசைக்கல் சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விடவும்.
- ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
செய்முறை விளக்கம் அருமை சகோ.
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ.
Deleteசெய்துபார்க்கிறேன். நிச்சயம் என் பெண்ணுக்குப் பிடிக்கும் என்று தோன்றுகிறது.
ReplyDeleteசெய்து பாருங்கள் கண்டிப்பாக உங்கள் பொண்ணுக்கு பிடிக்கும்.
Deleteநானும் இதை செய்து பார்த்து எங்கள் பிளாக்கில் பகிர்ந்திருக்கிறேன்.
ReplyDeleteநன்றி சகோ.
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
செய்முறை விளக்கத்துடன் அசத்தல் சிறப்பு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கருத்துக்கு நன்றி ரூபன்.
Deleteவித்தியாசமான, சுவையான குறிப்பு!
ReplyDeleteநன்றி மனோக்கா
ReplyDeleteஅரிசி, உளுந்தை ஊற வைத்துக் கொண்டு நீங்க சொல்லி இருக்கும்பொருட்களை அதில் சேர்த்தே அரைத்துத் தோசை வார்த்திருக்கிறேன். இம்முறையில் செய்ததில்லை. :) ஆனால் இங்கே போணி ஆகாது! குழந்தைங்க இருந்தால் போணி ஆகும். :)
ReplyDeleteவணக்கம் !
ReplyDeleteநாவூறும் தோசை நயம்படச் செய்தளித்தீர்
பாவூறும் வண்ணம் படைத்து !
செய்துபார்த்து உண்கிறோம் பகிர்வுக்கு நன்றி
வாழ்க நலம்
Amma supera irukuma. Thanks
ReplyDelete