Tuesday, May 9, 2017

வெஜ் புலாவ் / Veg Pulao


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாஸ்மதி அரிசி - 1 கப் 
  2. பிரஷ் பட்டாணி - 50 கிராம் 
  3. காலிபிளவர் - 50 கிராம் 
  4. கேரட் - 50 கிராம் 
  5. பீன்ஸ் - 50 கிராம் 
  6. பச்சை மிளகாய் - 3
  7. தக்காளி - 1
  8. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 
  9. தேங்காய் பால் - 1 கப் 
  10. மல்லித்தழை - சிறிது 
  11. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  2. நெய் - 2 மேஜைக்கரண்டி 
  3. பட்டை - 1 இன்ச் அளவு 
  4. கிராம்பு - 2
  5. பெரிய வெங்காயம் - 1
செய்முறை -
  1. பாஸ்மதி அரிசியை தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும். காலிபிளவர், கேரட், பீன்ஸ், தக்காளி எல்லாவற்றையும் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
  2. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு அதனுடன் பட்டாணி, நறுக்கி வைத்துள்ள காலிபிளவர், கேரட், பீன்ஸ் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி ஒரு கப் தேங்காய் பால்,  2 கப் தண்ணீர்,  மற்றும் உப்பு, சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து மூடவும்.
  5. நீராவி வந்ததும் வெயிட் போட்டு 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும் சுவையான வெஜ் புலாவ் ரெடி.

6 comments:

  1. செய்முறை விளக்கம் அருமை சகோ

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  3. "நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்" - ஏற்கனவே அடுப்பு அணைந்துதானே இருக்கு (விசில் வந்தபிறகு). மற்றபடி செய்முறை நல்லா இருக்கு. இதுவரை நேரடியாக குக்கரில் (உள் பாத்திரம் வைக்காமல்) செய்ததில்லை. முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  4. உங்கள் செயல்முறையில் நான் செய்த சமையல் ஒருவர் கூட மிச்சம் வைக்காமல் உண்டு விட்டனர். கடைசியில் குடும்ப தலைவன் எனக்கு கிடைக்கல

    ReplyDelete
  5. செய்து பார்த்து சொன்ன அருமையான கருத்துக்கு நன்றி மா.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...