பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- பொட்டுக்கடலை - 1/2 கப்
- தேங்காய் துருவல் - 1/2 கப்
- மிளகாய் வத்தல் - 2
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு
- பூண்டுப்பல் - 2
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் வெட்டி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், மிளகாய் வத்தல் சேர்த்து நன்கு வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பிறகு உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான பொட்டுக்கடலை சட்னி ரெடி.
ஆஹா படங்களை பார்க்கும் பொழுதே ஆசையாக இருக்கின்றது சகோ
ReplyDeleteகருத்துக்கு நன்றி சகோ.
ReplyDeleteYour cooking I tried it is very good
ReplyDeleteThank you
ReplyDeleteஅருமையான சட்னி!
ReplyDeleteநன்றாக இருக்கிறது
ReplyDeleteThank you
ReplyDelete