Wednesday, January 25, 2017

ரசப்பொடி / Rasa Podi

தேவையான பொருள்கள் -
  1. மிளகாய் வத்தல் - 10
  2. மிளகு - 5 மேஜைக்கரண்டி 
  3. சீரகம் - 5 மேஜைக்கரண்டி 
  4. கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி 
  5. கடலைப்பருப்பு - 5 மேஜைக்கரண்டி 
  6. காயத்தூள் - 1 தேக்கரண்டி 
செய்முறை -
  1. காயத்தூள் தவிர மற்ற  எல்லா பொருள்களையும்  வெயிலில் 2 மணி நேரம் காய வைத்து சிறிது நேரம் ஆற விடவும். 
  2. ஆறிய பிறகு அரைக்க கொடுத்த பொருள்களோடு காயத்தூளையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு திரித்து ஒரு பேப்பரில் பரப்பி விடவும். 
  3. நன்கு ஆறிய பிறகு ஒரு காற்றுப்புகாத டப்பாவில்  எடுத்து வைக்கவும். இந்த அளவு 10 தடவை ரசம் வைக்க வரும்.

Tuesday, January 17, 2017

கத்தரிக்காய் மசியல் / Brinjal Masiyal


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கத்தரிக்காய் - 2
  2. மிளகாய் வத்தல் - 2
  3. பெரிய வெங்காயம் - 1
  4. தக்காளி - 1
  5. மல்லித்தழை - சிறிது 
  6. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. கத்தரிக்காய்களை வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும். அப்போது தான் கறுத்து போகாமல் இருக்கும்.வெங்காயம், தக்காளி. மல்லித்தழை எல்லாவற்றையும் நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும்  வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. தக்காளி நன்கு வதங்கியதும் கத்தரிக்காய் துண்டுகளுடன் உப்பு சேர்த்து வதக்கவும். கத்தரிக்காய் வெந்ததும் இறுதியில் மிளகாய் வத்தல், மல்லித்தழை சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்ஸியில் அரைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள ஒரு மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து மசியலில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும்.
  5. சுவையான கத்தரிக்காய் மசியல் ரெடி. இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Monday, January 9, 2017

ஹெல்த் கேர் பத்திரிகையில் மீண்டும் என்னுடைய ரெசிபி !



ஜனவரி 2017 ஹெல்த் கேர் மாத இதழ் பத்திரிக்கையில் என்னுடைய வெள்ளை அவல் புட்டு ரெசிபி வெளி வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவரிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த மூன்று மாதங்களாக என்னுடைய ரெசிபிகள் ஹெல்த் கேர் பத்திரிக்கையில் வந்து கொண்டிருக்கிறது. நவம்பர் மாத பத்திரிக்கையில் இட்லி மஞ்சூரியனும், டிசம்பர்  மாத பத்திரிக்கையில் வீட்டில் பனீர் தயாரிக்கும் முறை ரெசிபியும் வந்துள்ளது.

நன்றி
சாரதா



Saturday, January 7, 2017

ஓமப்பொடி / Omapodi


தேவையான பொருள்கள் -
  1. கடலை மாவு - 1 கப் 
  2. பச்சரிசி  மாவு - 1/2 கப் 
  3. ஓமம் - 1 மேஜைக்கரண்டி 
  4. வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
  6. சுடுவதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. ஓமத்தை வெந்நீரில்  2 மணி நேரம் ஊற வைத்து  நீரை வடி கட்டி தனியே வைக்கவும்.
  2. ஊறிய ஊமத்தை  மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்திருக்கும் ஓமத்தண்ணீருடன் கரைத்து வடி கட்டிக்கொள்ளவும்.
  3. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, வெண்ணெய், காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் ஓமத் தண்ணீரை சேர்த்து பிசையவும்.
  4. பிறகு அதனுடன் தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து  முறுக்கு குழலில் ஓமப்பொடி அச்சை போட்டு குழல் கொள்ளும் அளவுக்கு மாவை வைத்து பிழியவும்.
  6. ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விடவும். இரு புறமும் வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் பிழிந்து எடுக்கவும்.
  7. பிறகு எல்லாவற்றையும் கையால் நொறுக்கி ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...