பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- கத்தரிக்காய் - 2
- மிளகாய் வத்தல் - 2
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- மல்லித்தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- கத்தரிக்காய்களை வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும். அப்போது தான் கறுத்து போகாமல் இருக்கும்.வெங்காயம், தக்காளி. மல்லித்தழை எல்லாவற்றையும் நறுக்கி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் கத்தரிக்காய் துண்டுகளுடன் உப்பு சேர்த்து வதக்கவும். கத்தரிக்காய் வெந்ததும் இறுதியில் மிளகாய் வத்தல், மல்லித்தழை சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்ஸியில் அரைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள ஒரு மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து மசியலில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும்.
- சுவையான கத்தரிக்காய் மசியல் ரெடி. இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
ஸூப்பர்
ReplyDeleteநல்லதொரு குறிப்பு..
ReplyDeleteவாழ்க நலம்..
குறிப்பு நன்றாயிருக்கிறது. இதில் கொஞ்சம் புளி, இன்னும் ஒரு மிளகாய் வைத்து அரைத்தால் கத்தரிக்காய் சட்னி!
ReplyDeleteஇந்த குறிப்பும் நன்றாக இருக்கிறது மனோ அம்மா...
Deleteஅன்பு நன்றி தனபாலன்!
ReplyDeleteஇப்படிச் செய்ததில்லை. முயற்சித்து விடலாம்.
ReplyDeleteArumai
ReplyDeleteThank you
ReplyDelete