Wednesday, January 25, 2017

ரசப்பொடி / Rasa Podi

தேவையான பொருள்கள் -
  1. மிளகாய் வத்தல் - 10
  2. மிளகு - 5 மேஜைக்கரண்டி 
  3. சீரகம் - 5 மேஜைக்கரண்டி 
  4. கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி 
  5. கடலைப்பருப்பு - 5 மேஜைக்கரண்டி 
  6. காயத்தூள் - 1 தேக்கரண்டி 
செய்முறை -
  1. காயத்தூள் தவிர மற்ற  எல்லா பொருள்களையும்  வெயிலில் 2 மணி நேரம் காய வைத்து சிறிது நேரம் ஆற விடவும். 
  2. ஆறிய பிறகு அரைக்க கொடுத்த பொருள்களோடு காயத்தூளையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு திரித்து ஒரு பேப்பரில் பரப்பி விடவும். 
  3. நன்கு ஆறிய பிறகு ஒரு காற்றுப்புகாத டப்பாவில்  எடுத்து வைக்கவும். இந்த அளவு 10 தடவை ரசம் வைக்க வரும்.

20 comments:

  1. பயனுள்ளவை எனது மகளிடம் சொன்னேன் சகோ

    ReplyDelete
    Replies
    1. மகளிடம் சொன்னது குறித்து சந்தோஷம் சகோ.

      Delete
  2. எனது துணைவியின் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டேன்... நன்றி அம்மா...

    ReplyDelete
  3. அருமையான பதிவு அவசர யுகத்தில் பயனுள்ளது நன்றி அம்மா

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மு.

      Delete
  4. அவசரத்திற்குக் கை கொடுக்கும்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சார்.

      Delete
  5. நிறைய பேருக்கு இந்த ரசப்பொடி குறிப்பு பயன்படும். பார்க்கவே மிக அழகாயிருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி மனோக்கா.

      Delete
  6. நன்றி. நாங்கள் ரசத்துக்கு என்று தனியாக பொடி செய்து வைத்துக்கொள்வதை நிறுத்தி விட்டோம்! சாம்பார்ப் பொடியிலிருந்தே போட்டுக் கொள்கிறோம்!!

    ReplyDelete
  7. சாம்பார் பொடியும் போடலாம். வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  8. Amma tomato dosai epdi seyarathu solli thaga amma

    ReplyDelete
  9. In this curry leaves add... rasam delicious


    Toor dal can add in ready paruppu rasam
    Kollu fry and add kollu rasam ready

    ReplyDelete
  10. Very nice recipes amma recently i am cooking some of ur recipes my husband told it's too good. Thanks u amma

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...