Friday, June 9, 2017

சுரைக்காய் பருப்பு கூட்டு / Bottle Gourd Paruppu Kootu


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. நறுக்கிய சுரைக்காய் - 1/2 கப் 
  2. கடலைப்பருப்பு - 1/4 கப் 
  3. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  6. மல்லித்தழை - சிறிது 
  7. உப்பு - தேவையான அளவு 

அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  2. தக்காளி - 1
  3. சின்ன வெங்காயம் - 10
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. வெங்காயம் - சிறிது 
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. தக்காளி, சின்ன வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. தக்காளி வதங்கியதும் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்சியில் அரைக்கவும்.
  4. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் பருப்பு, மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேக வைக்கவும்.
  5. பருப்பு நன்கு வெந்ததும் அதோடு சுரைக்காய் துண்டுகளை சேர்த்து வேக விடவும். சுரைக்காய் வெந்ததும் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மசாலா  வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
  6. மசாலா வாடை போனதும் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து இறக்கி விடவும்.
  7. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி கூட்டில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான சுரைக்காய் பருப்பு கூட்டு ரெடி.

10 comments:

  1. முதல் புகைப்படமே ஆசையை தூண்டுகிறது

    ReplyDelete
  2. வணக்கம் !

    சுரக்காயில் கூட்டும் சுவைதரும் ! நெஞ்சின்
    உரத்தைக் கொடுக்கும் உவந்து !

    அருமை

    ReplyDelete
  3. உடல் நலம் பேண
    உதவும் உணவு!

    ReplyDelete
  4. வித்தியாசமான, நல்லதொரு குறிப்பு!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...