Thursday, September 22, 2016

உருளைக்கிழங்கு மசாலா / Potato Masala


பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. உருளைக்கிழங்கு -4
  2. தக்காளி - 1
  3. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
  6. மல்லித்தழை - சிறிது 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி 
  3. பெரிய வெங்காயம் - 1
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து சிறிது நேரம் ஆறவிடவும். நன்கு ஆறியதும் தோலுரித்து மசித்து வைக்கவும்.
  2. வெங்காயம், தக்காளி, மல்லித்தழை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்..
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம் போடவும். பெருஞ்சீரகம் பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
  5. பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.
  6. மசாலா வாடை போனதும் மசித்து வைத்துள்ள கிழங்குகளை சேர்க்கவும்.
  7. மசாலா கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான உருளைக்கிழங்கு மசாலா ரெடி. பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நல்ல சுவையாக இருக்கும்.

11 comments:

  1. ஒரு வாரத்திற்குப் பிறகு நேற்று தான் உருளைக் கிழங்கு மசாலா செய்தேன்..

    தக்காளி தவிர்த்து செய்முறை எல்லாம் இதேதான்!..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  2. நல்ல சுவையான மசாலா

    ReplyDelete
  3. அருமையான விவரிப்பு! நன்றி!

    ReplyDelete
  4. சிறந்த வழிகாட்டல்

    ReplyDelete
  5. நேற்றிரவு செய்தேன்... ஏறக்குறைய இதே செய்முறைதான்.... சாம்பார் பொடி சேக்கலை... கொஞ்சமே கொஞ்சம் மிளகாய் பொடி சேத்துக்கிட்டேன்... உரைப்புக்காக....

    நல்ல செய்முறை விளக்கம் அம்மா...

    ReplyDelete
  6. வணக்கம் !

    காலையில் பரோட்டாவுக்கு சும்மா அடிபுளி யா இருக்கும் போல !
    ம்ம் நல்லது செய்து பார்க்கிறேன் தொடர வாழ்த்துகள் !

    ReplyDelete
  7. தொடர வாழ்த்துகள் !

    ReplyDelete
  8. முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து கருத்திடுங்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...