தேவையான பொருள்கள் -
- மாங்காய் - 1
- மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
- காயத்தூள் - 1/4 மேஜைக்கரண்டி
- வெந்தய தூள் - 1/2 மேஜைக்கரண்டி
- அச்சு வெல்லம் - 1
- உப்பு - 1/2 மேஜைக்கரண்டி
- நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- மாங்காயை நன்றாக கழுவி துடைத்து விட்டு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அச்சு வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.அச்சுவெல்லம் கரைந்ததும் வடி கட்டி தனியே வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும்.
- கடுகு வெடித்தவுடன் மாங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். மாங்காய் வெந்ததும் மிளகாய் தூள், காயத்தூள், வெந்தயத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
- இறுதியில் வடி கட்டி வைத்துள்ள அச்சு வெல்லத்தண்ணீரை ஊற்றி நன்றாக கிளறவும். அச்சுவெல்லத் தண்ணீர் கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.
- நன்கு ஆறியவுடன் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். ஊறுகாயை பிரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கவும்.
செய்முறை அருமை! இது வட இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற ஊறுகாய்!
ReplyDeleteகருத்துக்கு நன்றி மனோக்கா.
ReplyDeleteஸூப்பர் ஊறுகாய்
ReplyDeleteஅருமை. சப்பாத்தி ரொட்டிக்கு எல்லாம் ஏற்றது.
ReplyDeleteபொதுவாகவே மாங்காய் உடலுக்கு நல்லது..
ReplyDeleteஇனிய பதிவு.. வாழ்க நலம்..
ருசித்தோம். நன்றி.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? நல்ல ஊறுகாய்.செய்முறை விளக்கங்களும்,படங்களும் அருமையாக இருந்தது.பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி.
தங்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.