பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- பிரட் துண்டுகள் - 6
- தக்காளி - 1
- லெமன் ஜூஸ் - 2 மேஜைக்கரண்டி
- தண்ணீர் - 100 மில்லி
- மல்லித்தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
செய்முறை -
- முதலில் பிரட் துண்டுகளின் ஓரங்களை கட் பண்ணி எடுத்து விடவும். பிறகு பிரட்டை சிறிய துண்டுகளாக கட் பண்ணி வைக்கவும். தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு சுருள வதங்கியதும் அரை கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பு மற்றும் பிரட் துண்டுகளை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறவும்.
- இறுதியில் லெமன் ஜூஸ் ஊற்றி மல்லித்தழையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான பிரட் உப்புமா ரெடி.
Bread upma looks yummy.
ReplyDeleteBread upma looks delicious.
ReplyDelete