பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
தேவையான பொருள்கள் -
- நூடுல்ஸ் / ஸ்பகட்டி - 150 கிராம்
- முட்டை - 2
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- குடமிளகாய் - 1
- மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
- கரம் மசாலா - 1 தேக்கரண்டி
- சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
- கொத்தமல்லித் தழை - சிறிது
- முதலில் ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சிறிது உப்பு, ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் மற்றும் நூடுல்ஸ் சேர்த்து கொதிக்க விடவும்.
- நூடுல்ஸ் வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டியில் வடித்து எடுத்து குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைக்கவும்.
- வெங்காயம், தக்காளி, குடமிளகாய் மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து மூன்று மேஜைக்கரண்டி எண்ணைய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி சுருள வதங்கியதும் குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, சோயா சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- வதக்கியவற்றை கடாயில் ஓரமாக ஒதிக்கி வைத்து விட்டு மற்றொரு புறத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
- முட்டையை நன்றாக கிளறி பொடிமாஸ் மாதிரி செய்து கொள்ளவும். பிறகு அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கிளறவும்.
- பெரிய கடாய் இல்லையென்றால் மற்றொரு கடாயில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு முட்டையை சேர்த்து தனியாக கிளறி இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
- இப்பபோது நூடுல்ஸ் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். கொத்தமல்லித் தழையை சேர்த்து பரிமாறவும். சுவையான முட்டை நூடுல்ஸ் ரெடி.
yummy noodles. will try.
ReplyDelete