தேவையான பொருள்கள் -
அரைக்க -- பெரிய வெங்காயம் - 1
- சிக்கன் - 250 கிராம்
- கொத்தமல்லித்தழை மற்றும் புதினா - 1/2 கப்
- மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
- சீரகத் தூள் - 1 மேஜைக்கரண்டி
- மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
- கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- தயிர் - 2 மேஜைகரண்டி
- எலுமிச்சைசை சாறு - 1 மேஜைக்கரண்டி
- எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- பட்டை - 1
- கிராம்பு - 2
- நெய் - 2 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- பாஸ்மதி அரிசி - 2 கப்
- உப்பு - தேவையான அளவு
- பட்டை - 1
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 3
- பிரிஞ்சி இலை - 2
- எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
- இஞ்சி(துருவியது) - 2 மேஜைக்கரண்டி
- பூண்டு(துருவியது) - 2 மேஜைக்கரண்டி
- பச்சை மிளகாய் - 2
- பட்டை - 1
- கிராம்பு - 2
- சோம்பு - 1 மேஜைக்கரண்டி
- அரிசியை கழுவி 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
- அரைக்க கொடுத்தவற்றை நன்கு அரைத்து கொள்ளவும்.
- வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும். சிக்கனை நன்றாக கழுவி வெட்டி கொள்ளவும். கொத்தமல்லித் தழை, புதினாவை சிறியதாக வெட்டி கொள்ளவும்.
- ஒரு அடிகனமான பாத்திரத்தில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.
- பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியவுடன் அரைத்த கலவையை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- அதன் பின் சிக்கன், உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள் போட்டு கிளறி விடவும்.
- கொத்தமல்லி தழை, புதினா, தயிர் மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து சிக்கன் வேகும் வரை மூடி போட்டு வேக விடவும்.
- சிக்கன் வேகும் போதே மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்ததும் உப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, எண்ணெய் சேர்க்கவும். உப்பு சரி பார்த்து விட்டு அரிசியை போடவும். அரிசி 90% வெந்ததும் அதை வடித்து விடவும்.
- பட்டை, கிராம்பை அதிகமாக விரும்பாதோர் சாதத்தை வடித்ததும் அதிலிருக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் அனைத்தையும் எடுத்து விடவும்.
- ஓவனை 350 F-ல் சூடு பண்ணவும். ஒரு பெரிய மூடி கொண்ட அகலமான அடிகனமான கடாயை எடுத்து கொள்ளவும். 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டுக் கொள்ளவும்.
- பிறகு தயாராக இருக்கும் கிரேவியில் இருந்து சிக்கன் துண்டுகளை மட்டும் எடுத்து பரப்பி வைக்கவும்.
- பிறகு வடித்த சாதத்தை சிக்கன் துண்டுகள் மீது பரப்பி வைக்கவும்.
- அதன் மேல் மீதமுள்ள கிரேவியை ஊற்றவும். அதன் மேல் 2 மேஜைக்கரண்டி நெய்யை பரப்பி ஊற்றவும்.
- பிறகு அலுமினியம் பாயில் போட்டு மூடியை போடவும். டைட்டாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மூடியை போட்டு சப்பாத்தி மாவை சுற்றி ஒட்டி விட வேண்டும்.
- அதை ஓவனில் 25 நிமிடம் வைக்கவும். பிறகு ஓவனில் இருந்து எடுத்து விடவும். ஒரு 15 நிமிடம் கழித்து மூடியை திறந்து மெதுவாக கிளறி பரிமாறவும்.
வித்தியாசமான செய்முறை.
ReplyDelete