Wednesday, March 6, 2013

அவியல் / Aviyal



பரிமாறும் அளவு - 4

தேவையான பொருள்கள் -
  1. முருங்கைக்காய் - 8 துண்டுகள் 
  2. வாழைக்காய் - 1
  3. உருளைக்கிழங்கு - 1
  4. கேரட் - 1
  5. மாங்காய் - 1/2
  6. உப்பு - தேவையான அளவு
  7. தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  8. கறிவேப்பில்லை - சிறிது                             
அரைக்க -
  1. தேங்காய்த் துருவல் - 8 மேஜைக்கரண்டி 
  2. சின்ன வெங்காயம் - 6
  3. பச்சை மிளகாய் - 4
  4. சீரகம் - 2 மேஜைக்கரண்டி                             
செய்முறை -
  1. காய் அனைத்தையும் நறுக்கி தண்ணீரில் உப்பு சேர்த்து  வேக விடவும்.                      
  2. 10 நிமிடம் கழித்து அல்லது காய் வெந்ததும் தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.           
  3. அரைக்கக் கொடுத்தவற்றை கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் அரைத்த விழுதை சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விடவும்.            
  5. பின்னர் வேக வைத்த காய்களை சேர்த்து கட்டியானதும் இறக்கி விடவும்.        
  6. இறக்கிய பின்னர் தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து கிளறி விடவும்.
  7. சுவையான அவியல் ரெடி.
குறிப்புகள் -
  1. மாங்காய்க்குப் பதிலாக சிறிது புளியை ஊற வைத்து கரைத்து அதை சேர்த்துக் கொள்ளலாம்.
  2. எண்ணெய், கருவேப்பில்லையுடன் 4 மேஜைக்கரண்டி தயிரை சேர்த்து கிளறினால் இன்னும் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...