தேவையான பொருள்கள் -
- எலும்பில்லா சிக்கன் - 300 கிராம்
- பெரிய வெங்காயம் - 1/2
- மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
- சீரகத் தூள் - 1 மேஜைக்கரண்டி
- மிளகுத் தூள் - 2 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 மேஜைக்கரண்டி
- கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை -
- சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவி மிகவும் சிறிய துண்டுகளாக நறிக்கி கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறிக்கி கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் மல்லித் தூள், சீரகத் தூள், 1 மேஜைக்கரண்டி மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.
- இப்பொது சிக்கனை சேர்த்து நன்றாக கிளறி கடாயை மூடி வைக்கவும். தீயை குறைத்து வைத்து 15 நிமிடம் அல்லது சிக்கன் வேகும் வரை கொதிக்க விட வேண்டும். நடுவே கிளறி விடவும். சிக்கன் தண்ணீர் விடுவதால் தனியாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
- சிக்கன் நன்றாக வெந்ததும் மீதமுள்ள மிளகுத் தூளை சேர்த்து கிளறி இறக்கவும்.இதை பிரியாணி, ப்ரைட் ரைஸ் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
- காரத்திற்கு மிளகுத் தூள் மட்டுமே சேர்ப்பதால் குழந்தைகளும் சாப்பிடலாம்.
- நன்றாக காரம் சாப்பிடுவோர்கள் பச்சை மிளகாய் ஒன்றை சேர்த்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment