தேவையான பொருள்கள் -
- எள் - 100 கிராம்
- மிளகாய் வத்தல் - 6
- புளி - 1 (எலுமிச்சை பழம் அளவு)
- பூண்டு - 10 பல்
- உப்பு - 1 1/2 மேஜைக்கரண்டி
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எள்ளைப் போட்டு வறுக்கவும். எள் வெடித்து நின்றதும் அதை தனியாக எடுத்து வைக்கவும்.
- அதே கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாய் வத்தலை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- பின்னர் புளி, பூண்டு ஆகியவற்றைத் தனித்தனியாக போட்டு வறுக்கவும்.
- கடைசியாக அடுப்பை அணைத்து விட்டு அதே கடாயில் கறிவேப்பிலையைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி எடுத்து கொள்ளவும்.
- ஆறிய பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு அதனுடன் உப்பையும் சேர்த்து பொடித்து கொள்ளவும்.
- எள்ளுப் பொடி ரெடி. இது இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். காற்று புகாத பாட்டிலில் போட்டு ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.
No comments:
Post a Comment