பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- பூண்டு -1 (15 பற்கள் )
- மிளகாய்த்தூள் - 1/4 மேஜைக்கரண்டி
- மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
- சீரகத்தூள் - 1/2 மேஜைக்கரண்டி
- மிளகு தூள் - 1/2 மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி
- புளி - கோலி அளவு
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 4
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 மேஜைக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 4
- வெந்தயம் - 1/2 மேஜைக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- புளியை 1 1/2 கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை அரைத்து கொள்ளவும்.
- முதலில் அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி ஊற்றி பூண்டை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். தீயை சிம்மில் வைத்து செய்யவும்.
- வதக்கிய பூண்டை தனியாக வைத்து விட்டு அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- பின்னர் புளி தண்ணீரை ஊற்றி மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள்,மிளகு தூள், மஞ்சள் தூள், உப்பு, பூண்டு போட்டு 10 நிமிடங்கள் அல்லது பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
- பின்னர் அரைத்த விழுதை சேர்த்து 5-10 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான பூண்டு குழம்பு ரெடி.
- மிளகாய் வத்தல், மல்லி, சீரகம்,மிளகு எல்லாவற்றையும் நன்கு வறுத்து அரைத்தும் வைக்கலாம்.
Nice...
ReplyDeleteThank you
ReplyDelete