பரிமாறும் அளவு - 4
தேவையான பொருள்கள் -
- தக்காளி -1 கப்
- வெங்காயம் - 1கப்
- மிளகாய் வத்தல் - 2
- பூண்டு பற்கள் - 4
- தேங்காய் துருவல் - 6 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- கறிவேப்பில்லை - சிறிது
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி தனியாக எடுத்து ஆற வைக்கவும்.
- அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளியை நன்கு சுருள வதக்கி தனியாக எடுத்து ஆற வைக்கவும்.
- ஆறியதும் வதக்கிய வெங்காயம், தக்காளி, வத்தல், பூண்டு, தேங்காய் உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
- பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து அரைத்தைவையுடன் சேர்க்கவும். சட்னி ரெடி. இதை தோசை/ இட்லி/ சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
- பெரிய வெங்காயத்துக்கு பதிலாக சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
தக்காளி அரிந்து கொள்ள வேண்டுமா? ஆம் எனில் 2ஆகவா? 4ஆகவா? பொடியாகவா?
ReplyDelete