பரிமாறும் அளவு - 3 நபருக்கு
தேவையான பொருள்கள் -
செய்முறை -- பாஸ்மதி அரிசி - 2 கப்
- சிக்கன் - 200 கிராம்
- பீன்ஸ், காரட், கோஸ், காப்சிகம் - 1 கப்
- பூண்டு - 3
- சோயா சாஸ் - 1 மேஜைக்கரண்டி
- சில்லி சாஸ் - 1 மேஜைக்கரண்டி
- மிளகு தூள் - 1 மேஜைக்கரண்டி
- முட்டை - 2
- ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 5 மேஜைக்கரண்டி
- சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். காய்களை நீளமாக வெட்டி கொள்ளவும். பூண்டை துருவி கொள்ளவும்.
- அரிசியில் தண்ணீர், உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேக வைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து சாதத்தில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கிளறி ஆற வைக்கவும். சாதம் உதிரியாக இருக்க வேண்டும்.
- கடாயை அடுப்பில் வைத்து சிறிது 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு நன்கு வேகும் வரை ப்ரை செய்து தனியாக எடுத்து வைக்கவும்.
- கடாயை கழுவி விட்டு மீண்டும் அடுப்பில் வைத்து 1 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து ஊற்றி கொஞ்சம் உப்பு சேர்த்து கிளறவும். வெந்தவுடன் தனியாக எடுத்து வைக்கவும்.
- வாயகன்ற கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டை போட்டு வதக்கவும். அதன் பின் காய்களை போட்டு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- சாதத்தை சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து இறக்கவும்.
குறிப்புகள் -
- அஜினமோடோ உப்பு கொஞ்சம் சேர்த்து கொண்டால் சுவையாக இருக்கும்.
- சாதம் மிச்சமானால் அதை ப்ரைட் ரைஸ் செய்ய உபயோகிக்கலாம்.
- காய்கள் முக்கால் பாகம் வெந்தால் போதுமானது.
சூப்பராக இருக்கு.
ReplyDeleteSupr
ReplyDelete