Wednesday, March 6, 2013

ஆப்பம் / Aapam


பரிமாறும் அளவு - 4

தேவையான பொருள்கள் -
  1. பச்சரிசி - 2 கப் 
  2. சாதம் - 1 1/2 கப் 
  3. தேங்காய் துருவல் - 1 1/2 கப் 
  4. உப்பு - தேவையான அளவு
  5. சோடா உப்பு - 1/2 மேஜைக்கரண்டி  
செய்முறை -
  1. பச்சரிசயை 4-5 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊற வைத்த பச்சரிசி, சாதம், தேங்காய் துருவல் அனைத்தையும் கிரைண்டரில் அரைத்து கொள்ளவும்.
  3. 8 மணி நேரம் மாவை புளிக்க விடவும்.
  4. உப்பு மற்றும் சோடா உப்பை சேர்க்கவும்.
  5. பிறகு ஆப்பச் சட்டியில் ஆப்பத்தை சுட்டு எடுக்கவும்.
  6. ஆப்பத்தை தேங்காய் பால் அல்லது குருமாவுடன் சாப்பிடலாம்.
குறிப்புகள் -
  1. 8 மணி நேரத்துக்கு மேல் மாவை புளிக்க விட வேண்டாம். ஃப்ரிஜில் வைத்து உபயோகிக்கவும்.
  2. தோசை/இட்லி மாவை விட ஆப்ப மாவை கொஞ்சம் தண்ணியாக அரைக்க வேண்டும்.
  3. நான்-ஸ்டிக் ஆப்பச் சட்டி/டவாவை உபயோகிக்கவும்.

1 comment:

  1. Mam உளுந்து சேர்க்க வேண்டாமா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...