பரிமாறும் அளவு - 2 நபருக்கு
அரைக்க -
தாளிக்க -- தேங்காய் துருவல் - ஒரு சிறிய கப் (100 கிராம் )
- பச்சை மிளகாய் - 2
- பொட்டுக்கடலை - 3 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 மேஜைக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 4 (அரிந்தது )
- கறிவேப்பிலை - சிறிது
- அரைக்க கொடுத்த பொருள்கள் அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் சிறிது தண்ணிர் சேர்த்து அரைக்கவும்.
- அரைத்த விழுதை பாத்திரத்தில் ஊற்றி தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும்.கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றை சட்னியில் ஊற்றவும். தேங்காய் சட்னி ரெடி. இது இட்லி, தோசை,பொங்கலோடு சாப்பிட நன்றாக இருக்கும.
No comments:
Post a Comment