பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
தாளிக்க -
- கடுகு - 1/2 மேஜைக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/4தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1/2
- மிளகாய் - 2
- கறிவேப்பில்லை - சிறிது
- எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் வாழைக்காயைப் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.
- வெந்ததும் காயை வெளியில் எடுத்து தோலை நீக்கிக் கொள்ளவும். அதன்பின் வாழைக்காயை துருவியில் வைத்து துருவிக் கொள்ளவும்.
- துருவிய வாழைக்காயில் உப்பு, தேங்காய் துருவல் போட்டு கலந்து வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை மிளகாயை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும்.
- பின்னர் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி அடுப்பை ஆப் செய்யவும். இப்பொது துருவி வைத்திருக்கும் வாழைக்காய் கலவையை சேர்த்து கிளறி விடவும். வாழைக்காய் புட்டு ரெடி.
No comments:
Post a Comment