தேவையான பொருள்கள் -
- முட்டை - 2
- தக்காளி - 1
- மிளகாய்த்தூள் - 1/4 மேஜைக்கரண்டி
- மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
- மிளகு தூள் - 1/2 மேஜைக்கரண்டி
- சீரகத்தூள் - 1/2 மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி
- மல்லித் தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் துருவல் - 8 மேஜைக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 8
தாளிக்க -
- கடுகு - 1 தேக்கரண்டி
- கறிவேப்பில்லை - சிறிது
- நல்எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 5
செய்முறை -
- வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கி கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை அரைத்து கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- வதங்கியவுடன் தக்காளியை போட்டு நன்கு சுருள வதக்கவும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- வதக்கியதும் மிளகாய்த்தூள், மல்லிதூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு 2 நிமிடம் கிளறவும்.
- அதன்பின் 1 1/2கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து முட்டையை உடைத்து ஊற்றி அதன் மேல் 1 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
- அடுப்பை சிம்மில் 5 நிமிடம் வைக்க வேண்டும்.
- பின் லேசாக முட்டையை பிரட்டி விட வேண்டும். பின் 5 நிமிடங்கள் கழித்து மிளகு சீரகப்பொடியை போட வேண்டும்.
- கடைசியாக அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு மல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான முட்டைகுழம்பு ரெடி.
No comments:
Post a Comment